சுந்தர காளியம்மன் கோவில் திருவிழா - பக்தர்கள் நேர்த்தி கடன்
பாபநாசம் ஸ்ரீ சுந்தர காளியம்மன் ஆலய திருவிழாவில் திரளான பக்தர்கள் பங்கேற்று பால்குடம் காவடி எடுத்து வந்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.
தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் அரையபுரம் தட்டுமால் படுகையில் அமைந்துள்ள ஸ்ரீ சுந்தர காளியம்மன் ஆலய 8ம் ஆண்டு பால்குட திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது அது சமயம் குடமுருட்டி ஆற்றில் இருந்து கரகம், பால்குடம், அழகு காவடி எடுத்து வானவேடிக்கை மேளதாளத்துடன் முக்கிய வீதிகள் வழியாக கோவிலை வந்தடைந்தனர். பின்னர் அம்மனுக்கும் பரிவார தெய்வங்களுக்கும் அபிஷேக ஆராதனை நடைபெற்று மகாதீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் பெண்கள் உட்பட திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனுக்கு பால்குடம் எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தினர். திருவிழாவிற்கான ஏற்பாடுகளை கிராம நாட்டாமைகள் மற்றும் கிராமவாசிகள் செய்திருந்தனர்.
Next Story