பாபநாசம் : தீராத வயிற்று வலியால் இளம்பெண் தற்கொலை - போலீசார் விசாரணை
பைல் படம்
பாபநாசம் அருகே தீராத வயிற்று வலியால் இளம்பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் தாலுக்கா தேவராயன் பேட்டை மேல தெருவில் வசித்து வருபவர் சங்கர் மகள் சோபிகா வயது 18 .இவருக்கு தீராத வயிற்றுவலி இருந்து வந்தது பல மருத்துவ சிகிச்சை பெற்று பலனளிக்கததால் சம்பவத்தன்று வீட்டில் இருந்த எலி பேஸ்ட்டை மருந்தை சாப்பிட்டு விட்டார் உடனே சிகிச்சைக்காக தஞ்சாவூர் மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அங்கு சிகிச்சை பலனளிக்காமல் இறந்து விட்டார் இது குறித்து அவருடைய தந்தையார் சங்கர் கொடுத்த புகாரின் பேரில் பாபநாசம் போலீஸ் இன்ஸ்பெக்டர் தியாகராஜன் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிரார்.
Next Story