பாபநாசம் : வாக்குச்சாவடிகளுக்கு பொருட்கள் அனுப்பும் பணி

பாபநாசம் சட்டமன்ற தொகுதியில் உள்ள 301 வாக்குச்சாவடிகளுக்கு பயன்படுத்தப்படும் பொருள்களை பிரித்து அனுப்பும் பணியை உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் பார்வையிட்டார்.

பாபநாசம் சட்டமன்ற தொகுதியில் 301 வாக்கு சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன வாக்குப்பதிவு நாளில் வாக்குச்சாவடியில் பயன்படுத்தப்படும் வாக்குப்பதிவிற்கான தடுப்பு அட்டைகள், ஸ்டாம்பு பேட், தீப்பெட்டி தேர்வு எழுது அட்டை, உள்ளே வெளியே வாக்குப்பதிவு அதிகாரிகள் ஆண், பெண் எனும் வாசகங்கள் அடங்கிய அச்சிடப்பட்ட அட்டைகள் ,பிளேடு, கயிறு, பசை, நூல், சீல், பென்சில், இரும்பு ஸ்கேல், கார்பன் பேப்பர் ,கிளிப், ரப்பர்கள் , கவர் பேக்கிங் செய்ய தேவையான பொருட்கள் என 29 வகையான பொருட்களை தயார் செய்து அவற்றை ஒரே சக்கில் கட்டி தயார் நிலையில் வைத்துள்ளனர்.

தற்போது அங்கிருந்து ஒவ்வொரு வாக்கு சாவடிகளுக்கும் தனியாக பொருள்கள் பிரித்து வைக்கும் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது 18ஆம் தேதி காலை முதல் இந்த பொருள்களுடன் மின்னணு வாக்குபதி எந்திரங்களுடன் சேர்த்து சம்பந்தப்பட்ட வாக்குச்சாவடிகளுக்கு அனுப்பி வைக்கப்படும் பாபநாசம் வட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற இப்ப பணியினை பாபநாசம் சட்டமன்ற தொகுதி உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் முத்தகிருஷ்ணன் பாபநாசம் வட்டாட்சியர் மணிகண்டன் ஆகியோர் பார்வையிட்டனர் அப்போது தேர்தல் துணை வட்டாட்சியர் விவேகானந்தன் வட்ட வழங்கல் அலுவலர் அருணகிரி துணை வட்டாட்சியர்கள் தமயந்தி அன்புக்கரசி பிரபு ஆகியோர் உடன் இருந்தனர். பார்வையிட்டனர்

Tags

Next Story