பாபநாசம் : வினை தீர்த்த மகா மாரியம்மன் கோவில் பால்குட திருவிழா

பாபநாசம் : வினை தீர்த்த மகா மாரியம்மன் கோவில் பால்குட திருவிழா

பால்குட ஊர்வலம்  

பாபநாசம் வினை தீர்த்த மகா மாரியம்மன் கோவில் பால்குட திருவிழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை வழிபட்டனர்.

தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் படுகை புதுத்தெருவில் அமைந்துள்ள வினை தீர்த்த மகா மாரியம்மன் ஆலய பால்குடம் திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது. அது சமயம் பாபநாசம் திருமலைராஜன் ஆற்றில் இருந்து திரளான பக்தர்கள் தப்பாட்ட இசை நிகழ்ச்சி உடன் பால்குடம் காவடி வேல்வீதி உலா அழகு காவடி ஆகியவற்றுடன் முக்கிய வீதிகள் வழியாக வலம் வந்து கோவிலை வந்தடைந்தனர்.

பின்னர் அம்மனுக்கு அபிஷேக ஆராதனை நடைபெற்றது. பிறகு கஞ்சி வார்த்தலும் நடைபெற்றது மாலையில் அம்மனுக்கு சந்தனகாப்பு அலங்காரம் அதனை தொடர்ந்து மா விளக்கு பூஜை பூஜையும் நடைபெற்றது. இரவு வான வேடிக்கை மேளதாளமுடன் விநாயகர் முருகன் வெள்ளி தெய்வானை அம்மன் அலங்கார தேரில் வீதி உலா நடைபெற்றது. திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசித்து வழிபட்டனர். ஏற்பாடுகளை பாபநாசம் படுகை புதுத்தெரு கிராமவாசிகள் செய்திருந்தனர்

Tags

Next Story