பாபநாசம் புனித செபஸ்தியார் திருத்தல பெருவிழா
குடந்தை மறை மாவட்டம் பாபநாசம் புனித செபஸ்தியார் திருத்தல பெருவிழா ஆண்டுதோறும் நடைபெற்று வருகிறது. இந்த ஆண்டுக்கான கோடியேற்று விழா கடந்த 24ஆம் தேதி சேலம் மெட்டாலா லொயோலா கல்லூரி அதிபர் அல்போன்ஸ் மாணிக்கம் தலைமையில் கொடி குருத்தோலை பவனி நடைபெற்றது. அதனை தொடர்ந்து திருப்பலி திருவிழா கொடியேற்றமும் நடைபெற்றது. விழாவில் திரளானோர் கலந்து கொண்டனர்.
முன்னதாக பாபநாசம் கீழ வீதி தளபதி மக்கள் மன்றத்திலிருந்து பங்கு மக்கள் கொடியை ஊர்வலமாக கொண்டு வந்தனர். விழாவை முன்னிட்டு வருகிற ஏப்ரல் 1. 4. 2024 திங்கட்கிழமை அன்று முன்னாள் குடந்தை மறை மாவட்ட ஆயர் அந்தோணிசாமி தலைமையில் திருவிழா திருப்பலியும் இரவு குடந்தை பெஸ்கி கலை குழுவினரின் கலை நிகழ்ச்சிகளும் அதனை தொடர்ந்து மின்னலங்கார தேர்பவனியும் நடக்கிறது. வருகிற 2.4 .2024 செவ்வாய்க்கிழமை குடந்தை மறை மாவட்ட ஆயர் ஜீவானந்தம் அமலநாதன் தலைமையில் காலை,மத்தியம் திருப்பல்லியும் மாலையில் திருவிழா கூட்டு திருப்பல்லியும் நடக்கிறது .
இரவு பாஸ்டின் கலை குழுவினரின் கலை நிகழ்ச்சிகளும் அதனை தொடர்ந்து இரவு 10 மணிக்கு வாண வேடிக்கை முழங்கிட மணங்கமலும் மலர்கள் மின்னொளி அலங்கார ஆடம்பர தேர் பவனி நடக்கிறது. இதில் காவல் சம்மனசு, புனித செபஸ்தியார், உயிர்த்த இயேசு, சூசையப்பர், தேவமாதா, ஆகிய தேர் பவனிகள் மலர்கள் மின்னலங்காரம் வாண வேடிக்கை பேண்ட் வாத்தியம் முழங்க பாபநாசம் நகரத்தின் முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக செல்கிறது. இரவு 2 மணி அளவில் பாபநாசம் மேல வீதியில் சம்மனசு மாலை போடும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. இதனை தொடர்ந்து அன்று அதிகாலை 5 தேர் பவனிகளும் கோவிலை வந்தடைகிறது.
வருகிற 3. 4. 2024 புதன்கிழமை அன்று குடந்தை மறை மாவட்ட முதன்மை குரு பிலோமின் தாஸ் தலைமையில் காலையில் திருவிழா திருப்பல்லியும் மதியம் திருப்பலியும் மாலை திருப்பலியும் அதனை தொடர்ந்து கொடி இறக்கமும் நடைபெறுகிறது. விழாவிற்கான ஏற்பாடுகளை பாபநாசம் புனித செபஸ்தியார் திருத்தல பங்கு தந்தை போஸ்மான் ஆரோக்யராஜ் இணைப்பங்கு தந்தை தார்த்தீஸ் மற்றும் உபதேசிகர்கள் பங்கு பேரவை பங்கு மக்கள் செய்துள்ளனர். பாதுகாப்பு ஏற்பாடுகளை பாபநாசம் போலீஸ் சூப்பிரண்டு அசோக் போலீஸ் இன்ஸ்பெக்டர் தியாகராஜன் மற்றும் போலீஸார்கள் செய்துள்ளனர்