பாப்பிரெட்டிப்பட்டி: வேளாண்மை உதவி இயக்குனர் அறிவிப்பு
ஒழுங்குமுறை விற்பனை கூடம்
பாப்பிரெட்டிப்பட்டி வட்டாரத்தில் ராகி அறுவடை செய்துள்ள விவசாயிகள் தாங்கள் விளைவித்த ராகியை அரூர் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் விற்று பயன்பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாப்பிரெட்டிப்பட்டி வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் முனிகிருஷ்ணன் தெரிவித்ததாவது, தர்மபுரி மாவட்டம் அரூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட ,அரூர் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் தற்போது ராகி ஒரு கிலோ ரூ 38.46 க்கு கொள்முதல் செய்யப் பட்டு வருகிறது. எனவே, பாப்பிரெட்டிப்பட்டி வட்டாரத்தில் ராகி சாகுபடி செய்துள்ள விவசாயிகள் தங்களின் தேவைக்கு போக மீத முள்ள ராகியை கல், மண், உமி தூசு நீக்கி அரூர் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் விற்று பயன்பெறலாம். மேலும் ராகி கொள்முதல் ஆகஸ்ட் மாதம் வரை நடைபெறும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
Next Story