சீரான குடிநீர் கேட்டு காலி குடங்களுடன் பெண்கள் மனு
பெண்கள்
நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் அடுத்துள்ளது பெருங்குறிச்சி ஊராட்சிக்கு உட்பட்ட கருந்தேவன்பாளையம் பகுதியில் 300-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர். கடந்த ஒரு மாதம் முன்பாக பெய்த மழையினால் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிக்கு வரும் பைப் உடைந்து, அங்கு மின்மோட்டரும் பழுதாகிவிட்டதாக தெரிகிறது. இதனால் முறையான குடிநீர் வராமல், பொதுமக்கள் அவதிக்குள்ளாகி வந்தனர்.
இதுகுறித்து பொதுமக்கள் தொடர்ச்சியாக பஞ்சாயத்து உறுப்பினருக்கும், பஞ்சாயத்து தலைவருக்கும், மனு கொடுத்த நிலையில் கடந்த ஒரு மாதங்களாக தண்ணீர் வரவில்லை . ஆகையினால் முறையான குடிநீர் கேட்டு அப்பகுதி பெண்கள் காலி குடங்களை தலையில் சுமந்தபடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு மனு கொடுக்க வந்தனர். .இதனிடையே காலி குடங்களுடன் 30-க்கும் மேற்பட்ட பெண்கள் மாவட்ட ஆட்சியரை சந்தித்து மனு கொடுக்க சென்ற நிலையில் வாசலிலே தடுத்து நிறுத்திய காவலர்கள், நான்கு பெண்களை மட்டுமே மனு வழங்க அனுமதித்து அனுப்பி வைத்தனர். .இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.