சாரட் வண்டியில் ஊர்வலம் : உடற்கல்வி ஆசிரியருக்கு கவுரவம்!
சாரட் வண்டியில் ஊர்வலம்
வலசப்பட்டி அரசு உயர்நிலைப்பள்ளியில் பணியாற்றி ஒய்வு பெற்ற உடற்கல்வி ஆசிரியரை முன்னாள் மாணவர்கள் சாரட் வண்டியில் ஊர்வலமாக அழைத்து சென்றனர்.
பொன்னமராவதி அருகே வலசப்பட்டி அரசு உயர்நிலைப்பள்ளியில் உடற்கல்வி ஆசிரியராக பணியாற்றியவர் இன்பராஜ் பொன்னுத்துரை. இவர் நேற்று பணி ஓய்வு பெற்ற தையடுத்து அவரை கவுரவிக்கும் வகையில், பள்ளி யில் படித்த முன்னாள் மாணவர்கள் இணைந்து சாரட் வண்டியில் நகரின் முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக அழைத்து சென்றனர். பின்னர் அரசு மருத்துவமனை முன்பு உள்ள யாதவ மண்டபத்தில் பணி ஓய்வு பாராட்டு விழா நடந்தது. இதில் தலைமையாசிரியர், ஆசிரியர்கள், முன்னாள் மாணவர்கள் கலந்து கொண்டு வாழ்த்தி பேசினர்.
Next Story