பரமத்தி வேலூரில் கெட்டுபெபோன இறைச்சி பறிமுதல்
கெட்டுபோன இறைச்சி
பரமத்திவேலுார், பரமத்தி பகுதியில் உள்ள ஹோட்டல், சில்லி கடைகளில் தரமற்ற உணவுப் பொருட்கள் மூலம் உணவு தயாரித்து விற்பனை செய்யப்படுவதாக பரமத்திவேலுார் உணவு பாதுகாப்பு துறையினருக்கு தகவல் கிடைத்தது. தகவலையடுத்து வேலுார் மற்றும் பரமத்தி பகுதியில் உள்ள ஹோட்டல்கள், சில்லி கடைகள், ரெஸ்டாரண்டுகளில் உணவு பாதுகாப்பு அலுவலர் முத்துசாமி ஆய்வு மேற்கொண்டார்.
அப்போது குளிர்சாதன பெட்டியில் வைக்கப்பட்டிருந்த எண்ணெய்யில் பொறிக்கப்பட்ட சில்லி சிக்கன் மற்றும் தேதி குறிப்பிடாமல் வைத்திருந்த சில்லி பவுடர்கள் மூலம் தயாரித்து விற்பனை செய்து வந்தது தெரியவந்தது. மேலும் மீன், சிக்கன், வாத்து ஆகியவற்றின் மூலம் தயார் செய்யப்படும் உனது வகைகளை மீதமானால் குளிர்சாதன பெட்டியில் வைத்திருந்து மறுநாள் விற்பனை செய்வதும் தெரியவந்தது. மீதமான குளிர்சாதன பெட்டியில் வைக்கப்பட்டிருந்த மீன், சில்லி ஆகியவற்றை உணவு பாதுகாப்பு அலுவலர் பறிமுதல் செய்து கீழே கொட்டி அழித்தனர்.
மேலும் பழைய சப்பாத்தி மாவு மற்றும் கெட்டுப்போன இறைச்சிகளை பறிமுதல் செய்து பினாயில் ஊற்றி அளித்தனர். அதனையடுத்து 13 ஹோட்டல்களுக்கு நோட்டீஸ் வழங்கி, அபராதம் விதிக்கப்பட்டது.