பரமத்தி வேலூர் : சிவன் கோவில்களில் குரு பெயர்ச்சி மற்றும் அஷ்டமி விழா

பரமத்தி வேலுர் சுற்றுவட்டார பகுதிகளில் சிவன் கோயில்களில் உள்ள குரு பகவான் மற்றும் கால பைரவர் சன்னதியில் குரு பெயர்ச்சி மற்றும் தேய்பிறை அஷ்டமி விழா சிறப்பு பூஜை நடைபெற்றது.
பரமத்தி வேலூர் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள பாண்டமங்கலம் புதிய காசி விஸ்வநாதர் கோயில்,வெங்கமேடு விநாயகர் கோயில்,பேட்டை ஆலமரத்து விநாயகர் கோயில்,மாவுரெட்டி பீமேஸ்வரர் கோயில்,நன்செய் இடையாறு திருவேலீஸ்வரர் ஆகிய கோயில்களில் உள்ள குரு பகவான் சன்னதியில் குருபெயர்ச்சி விழா நடைபெற்றது. முன்னதாக சுவாமிக்கு பால்,தயிர்,பஞ்சாமிருதம்,மஞ்சள்,சந்தனம்,பன்னீர் உள்ளிட்ட வாசனை திரவியங்கள் கொண்டு அபிஷேகம் நடைபெற்றது. பின்னர் குரு பகவானுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை நடைபெற்றது. அதே போன்று கால பைரவருக்கு தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு சிறப்பு அபிஷேகம்,சிறப்பு பூஜை நடைபெற்றது. பட விளக்கம்: பாண்டமங்கலம் புதிய காசி விஸ்வநாதர் கோயிலில் உள்ள குரு பகவான் மற்றும் கால பைரவர் சிறப்பு அலங்காரத்தில்.

Tags

Next Story