பரமத்தி வேலூர் மகளிரணி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்!
ஆலோசனை கூட்டம்
நாமக்கல் மாவட்டத்தில் திமுக தலைமையிலான இந்திய கூட்டணியின் நாமக்கல் நாடாளுமன்ற தொகுதி வேட்பாளர் V.S.மாதேஸ்வரன் அவர்களை ஆதரித்து பரமத்தி வேலூர் சட்ட மன்ற தொகுதிகுட்பட்ட மகளிரணி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. மேலும் இக்கூட்டமானது மாவட்ட மகளிர் அணி அமைப்பாளர் ஜோதி மற்றும் துணை அமைப்பாளர் சாந்தி அவர்களின் ஏற்பாட்டில் நாமக்கல் மேற்கு மாவட்ட செயலாளர் S.M.மதுரா செந்தில் தலைமையில் தொகுதி பார்வையாளர் சேலம் முன்னாள் மேயர் ரேகா பிரியதர்ஷினி முன்னிலையில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் மாவட்ட,ஒன்றிய,பேரூர் கழக மகளிர் அணி மற்றும் தகவல் தொழில்நுட்ப மகளிர் அணி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
Next Story