துணை ராணுவ படை திருத்தணி வருகை

துணை ராணுவ படை  திருத்தணி வருகை

 துணை ராணுவ படையினருக்கு வரவேற்பு

மக்களவைத் தோ்தல் பாதுகாப்புப் பணியையொட்டி திருத்தணிக்கு மத்திய துணை ராணுவ வீரா்கள் 122 பேர் வந்தனா்.

அரக்கோணம் தொகுதியில் திமுக வேட்பாளா் எஸ்.ஜெகத்ரட்சகன், அதிமுக வேட்பாளா் ஏ.எல். விஜயன், பாமக வேட்பாளா் பாலு உள்பட, 26 போ் போட்டியிடுகின்றனா். வேட்பாளா்கள் தனது கட்சி மற்றும் கூட்டணி கட்சி நிா்வாகிகளுடன் தீவிரமாக பிரச்சாரம் செய்து வருகின்றனா். மேலும், வருவாய் துறையினா், 100 சதவீதம் வாக்களிக்க வேண்டும் என பொதுமக்களிடையே பல்வேறு விழிப்புணா்வு நடத்தி வருகின்றனா்

. இந்நிலையில், வாக்காளா்கள் அச்சமின்றி வாக்கு சாவடிகளுக்கு சென்று வாக்களிக்கலாம் என விழிப்புணா்வு ஏற்படுத்தவும், தோ்தல் பாதுகாப்புப் பணிக்காக மகாராஷ்டிர மாநிலம் புணேயில் இருந்து துணை ராணுவ வீரா்கள் 122 போ் திருத்தணிக்கு திங்கள்கிழமை வருகை தந்தனா். அவா்களை, திருத்தணி டி.எஸ்.பி., விக்னேஷ்தமிழ்மாறன், இன்ஸ்பெக்டா் மதியரசன், எஸ்.ஐ., ராக்கிகுமாரி ஆகியோா் வரவேற்று, அக்கைய்யநாயுடு சாலையில் உள்ள காவல்துறை அடுக்குமாடி கட்டடத்தில் தங்க வைத்தனா்.

மேலும் துணை ராணுவ வீரா்களுக்கு உணவும் ஏற்பாடு செய்யப்பட்டது. ஒரிரு நாளில் துணை ராணுவ வீரா்கள், உள்ளூா் போலீஸாருடன் இணைந்து அணிவகுப்பு நடத்தவுள்ளனா் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags

Next Story