ஆரணிக்கு துணை ராணுவத்தினர் வருகை

ஆரணிக்கு துணை ராணுவத்தினர் வருகை

துணை ராணுவ படை 

ஆரணி சட்டமன்ற தொகுதியில் தேர்தல் பாதுகாப்பு பணிக்கு துணை ராணுவத்தினர் வந்துள்ளனர்.
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி சட்ட மன்ற தொகுதியில் பொதுமக்கள் அச்சமின்றி வாக்களிக்க ஏதுவாக தேர்தல் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவதற்காக துணை ராணுவத்தினர் வந்துள்ளனர். ஆரணி துணை காவல் கண்காணிப்பாளர் ரவிச்சந்திரன் அவர்களுக்கு பூங்கொத்து கொடுத்து வரவேற்றார். அப்போது காவல் ஆய்வாளர்கள் விநாயகமூர்த்தி, ராஜாங்கம், உதவி காவல் ஆய்வாளர்கள் மற்றும் போலீசார் பலர் உடன் இருந்தனர்.

Tags

Next Story