துணை ராணுவ படையினர் போலீசார் உடன் கொடி அணிவகுப்பு

துணை ராணுவ படையினர் போலீசார் உடன் கொடி அணிவகுப்பு

குமாரபாளையத்தில் போலீசார் மற்றும் துணை ராணுவ படையினரின் அணிவகுப்பு மரியாதை நடைபெற்றது.


குமாரபாளையத்தில் போலீசார் மற்றும் துணை ராணுவ படையினரின் அணிவகுப்பு மரியாதை நடைபெற்றது.

ஈரோடு லோக்சபா தொகுதியில் நாமக்கல் மாவட்ட காவிரி கரையோர குமாரபாளையம் தொகுதியும் அடங்கும். குமாரபாளையம், பள்ளிபாளையம் இரு நகராட்சிகளை கொண்ட குமாரபாளையம் தொகுதியில் லோக்சபா தேர்தல் பணிகளை அனைத்து அரசியல் கட்சியினர் செய்து வருகிறார்கள். இந்நிலையில் மாவட்ட நிர்வாகம், வருவாய்த்துறை உள்ளிட்ட அனைத்துத்துறை அதிகாரிகள் தேர்தல் பணியாற்றி வருகிறார்கள். ஈரோடு தொகுதிக்குட்பட்ட குமாரபாளையம் தொகுதியில், தேர்தல் தொடர்பாக விழிப்புணர்வு பேரணி, துண்டு பிரசுரம் விநியோகம், பூத் சிலிப் வழங்குவதற்கான பணிகள், ஆகியன செயல்படுத்தி வருகிறார்கள். லோக்சபா தேர்தலில் ஈரோடு பாராளுமன்ற தொகுதியில் ஓட்டுப்பதிவு செய்யும் அலுவலர்களுக்கான முதற்கட்ட பயிற்சி வகுப்புகள் குமாரபாளையம் தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் நடந்தது. போலீசாரும் தேர்தல் பணிகளை செய்து வருகிறார்கள். குமாரபாளையம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட 279 ஓட்டுப்பதிவு மையங்களில் பாதுகாப்பு வசதி, உள்ளிட்டவைகளை நாமக்கல் மாவட்ட போலீஸ் எஸ்.பி. ராஜேஷ்கண்ணன் நேரில் பார்வையிட்டு, ஓட்டுச்சாவடி அருகில் உள்ள வீடு, கடைகள், ஆகியோரின் தகவல் சேகரிக்க வேண்டும், பாதுகாப்பு பணிகள் உறுதி செய்திட வேண்டும் என ஆலோசனை வழங்கினார்.

இதன் ஒரு கட்டமாக பொதுமக்கள் அச்சமின்றி ஓட்டு பதிவு செய்திட வேண்டும் என்பதை பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், கொடி அணிவகுப்பு நடந்தது. எஸ்.பி. ராஜேஷ்கண்ணன் உத்திரவுப்படி, ஏ.டி.எஸ்.பி. செல்வராஜ், டி.எஸ்.பி. இமயவரம்பன் தலைமையில், காவேரி நகர், காவேரி பாலம் பிரிவு பகுதியில் தொடங்கி, இடைப்பாடி சாலை, சேலம் சாலை வழியாக ராஜம் தியேட்டர் முன்பு நிறைவு பெற்றது. வழி நெடுக பொதுமக்கள் கொடி அணிவகுப்பை பார்வையிட்டனர்.

Tags

Next Story