பராசக்தி வெயிலுகந்தம்மன் பொங்கல் திருவிழா தேரோட்டம்

பராசக்தி வெயிலுகந்தம்மன் பொங்கல் திருவிழாவை முன்னிட்டு தேரோட்டம் நடைபெற்றது.
விருதுநகர் பராசக்தி வெயிலுகந்தம்மன் பொங்கல் திருவிழாவை முன்னிட்டு நடைபெற்ற தேரோட்டம் - ஏராளமன பக்தர்கள் வடம்பிடித்து இழுத்தனர். விருதுநகரில் அமைந்துள்ள பராசக்தி வெயிலுகந்தம்மன் கோவில் பொங்கல் திருவிழா வருடாவருடம் வைகாசி மாதம் சிறப்பாக நடைபெறும், அதனை முன்னிட்டு இந்தவருடம் வைகாசி பொங்கல் திருவிழாவை முன்னிட்டு கடந்த 14ம் தேதி செவ்வாய்கிழமை கொடியேற்று நிகழ்ச்சி நடைபெற்று இன்று பொங்கல் திருவிழா சிறப்பாக நடைபெற்று வருகிறது.. அதனை முன்னிட்டு பக்தர்கள் கொடியேற்றும் நாளில் கையில் காப்பு கட்டி ஒரு வாரம் வெயிலுகந்தம்மனுக்கு விரதமிருந்து வந்தனர். நேற்று நடைபெற்ற பொங்கல் திருவிழாவில் ஏராளமான பக்தர்கள் நாக்கில் அலகு குத்தியும், கையில் தீச்சட்டி, 21 அக்னி சட்டி, மற்றும் தொட்டில் குழந்தை எடுத்தும் பராசக்தி வெயிலு உகந்த அம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர். அதனை முன்னிட்டு இன்று தேரோட்டம் நிகழ்ச்சி நடைபெற்றது . இந்த தேரோட்டத்தை ஏராளமான பக்தர்கள் வடம்பிடித்து இழுத்தனர் இந்த தேரானது விருதுநகர் தேசபந்து மைதானத்தில் ஆரம்பித்து மெயின்பஜார், தெப்பம், தெற்கு ரதவீதி, மேலரதவீதி வழியாகவந்து மீண்டும் தேசபந்துமைதானத்தில் முடிவடைந்தது இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்து அம்மனின் அருள் பெற்றுச் சென்றனர்

Tags

Next Story