இலவச கட்டாய கல்வி மாணவர்களுக்கு புத்தகம் தர மறுப்பதாக பெற்றோர்கள் புகார்

இலவச கட்டாய கல்வி மாணவர்களுக்கு புத்தகம் தர மறுப்பதாக பெற்றோர்கள் புகார்

பொள்ளாச்சியில் மாவட்ட கல்வி அலுவலரின் உத்தரவை தனியார் பள்ளி மதிக்கவில்லை என பெற்றோர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.


பொள்ளாச்சியில் மாவட்ட கல்வி அலுவலரின் உத்தரவை தனியார் பள்ளி மதிக்கவில்லை எனவும் குற்றச்சாட்டியுள்ளனர்.

கோவை:பெள்ளாச்சியில் செயல்பட்டு வரும் ஸ்ரீ லதாங்கி வித்யா மந்திர் பள்ளியில் இலவச கட்டாயக்கல்வி உரிமைச்சட்டத்தின் கீழ் பயின்று வரும் மாணவர்களிடம் கல்வி கட்டணம் செலுத்த கூறி கட்டாயப்படுத்துவதாகவும்,

கட்டணம் செலுத்தாத மாணவர்களை தனிமைப்படுத்த படுவதாக கூறி கடந்த மாதம் மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளரிடம் பெற்றோர்கள் புகார் மனு அளித்து இருந்தனர். இதனையடுத்து தனியார் பள்ளிகளின் மாவட்ட கல்வி அலுவலர் இது தொடர்பாக விசாரணை செய்து உரிய நடவடிக்கை எடுக்கமாறு கூறப்பட்டது.

கடந்த 21ம் தேதி பொள்ளாச்சியில் பெற்றோர்கள் மற்றும் பள்ளி தலைமை ஆசிரியர் முன்னிலையில் நடைபெற்ற கூட்டத்தில் கல்வி கட்டணம் வசூலிக்க கூடாது எனவும் புத்தகங்களை வழங்க வேண்டும் என தனியார் பள்ளிக்கு அறிவுறுத்தபட்டுள்ளது.இந்நிலையில் மீண்டும் பள்ளிக்கு சென்ற மாணவர்களுக்கு புத்தகம் தர தனியார் பள்ளி மறுப்பதாகவும்,

இதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் இலவச கட்டாய கல்வி சட்டத்தின்படி பள்ளியில் பயிலும் குழந்தைகள் கல்வி பாதிக்கபடாத வகையில் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மாணவர்களின் பெற்றோர் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

Tags

Next Story