விஜயதசமியைமுன்னிட்டு குழந்தைகளை பள்ளியில் சேர்த்த பெற்றோர்
குழந்தைகளை பள்ளியில் சேர்த்த பெற்றோர்
புதுக்கோட்டையில் உள்ள பல்வேறு பள்ளிகளில் விஜயதசமியை முன்னிட்டு குழந்தைகளை சேர்க்கும் நிகழ்வு நடைபெற்றது
புதுக்கோட்டையில் உள்ள பல்வேறு பள்ளிகளில் விஜயதசமியை முன்னிட்டு புதிதாக பள்ளியில் சேர்க்கும் குழந்தைகளை நெல் பச்சரிசிகளை கொண்டு அகர எழுத்துக்கள் எழுதி பள்ளியில் சேர்க்கும் நிகழ்வு நடைபெற்றது இதில் ஏராளமான பெற்றோர்கள் தங்களின் குழந்தைகளை பள்ளியில் சேர்த்தனர் நவராத்திரியின் பத்தாம் நாளான இன்று விஜயதசமி கொண்டாடப்பட்டு வருகிறது இந்த விஜயதசமி பண்டிகையானது பாரம்பரியமாக எழுத்தறிவை போதிக்கும் நிகழ்வாக பார்க்கப்படுகிறது இந்த விஜயதசமியை முன்னிட்டு புதுக்கோட்டை மேட்டுப்பட்டி அருகே உள்ள தனியார் பள்ளியில் துவங்கப்பட்ட சேர்க்கை முகாமில் ஏராளமான பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை அழைத்து வந்து நெல் பச்சரிசிகளை கொண்டு அகர எழுத்துக்களை எழுதி பள்ளியில் சேர்த்தனர் அப்போது பள்ளி நிர்வாகத்தினர் சார்பில் குழந்தை செல்வங்களை உற்சாகபடுத்தும் வகையில் சிறுவர்களுக்கான விளையாட்டு மூன்று சக்கர வண்டி மற்றும் நோட்டு புத்தகங்களை பரிசாக வழங்கினர்.
Tags
Next Story