கொங்கணாபுரம் தொடக்கப் பள்ளிக்கு பெற்றோர்கள் சீர்வரிசை
பொங்கல் சீர்வரிசை அளித்த பெற்றோர்
சேலம் மாவட்டம் எடப்பாடி அடுத்த கொங்கணாபுரம் ஒன்றியம் ரெட்டிப்பட்டியில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி.... இப்பள்ளியில் தமிழ் மற்றும் ஆங்கிலம் என இரு பிரிவுகளில் மொத்தம் 140 மாணவ மாணவிகள் பயிலும் பள்ளிக்கு தற்போது மாவட்ட அளவில் சிறந்த பள்ளிக்கான காமராஜர் விருது மற்றும் மாநில அளவில் சிறந்த எழுத்தறிவு மையத்திற்கான விருது பெற்ற பள்ளியாகும்.
மேலும் பள்ளியின் இந்த ஆண்டின் ஆண்டு விழாவை முன்னிட்டு கொங்கணாபுரம் ஒன்றிய கிராம மக்கள் ஒன்று சேர்ந்து பள்ளிக்குத் தேவையான நோட்புக், பேனா, சேர், டேபிள், கேரம் போர்டு, ரப்பர், பென்சில், மற்றும் விளையாட்டு உபகரணங்கள் ரூபாய் 2 லட்சம் மதிப்பில் அப்பகுதி பொதுமக்கள் சார்பில் பள்ளிக்கு வழங்கப்பட்டுள்ளது.... முன்னதாக கொங்கணாபுரம் பிரிவு சாலையில் இருந்து சாரட்டு வண்டியில் மேளதாளங்களுடன் பொதுமக்கள் சீர்வரிசையாக மூன்று கிலோ மீட்டர் தூரம் வரை நடந்து சென்று பள்ளிக்கு வழங்கினார்.
அப்போது பள்ளிக்கு சீர்வரிசைவுடன் வந்தவர்களை பள்ளி குழந்தைகள் பூங்கொத்து கொடுத்தும் ஆரத்தி எடுத்தும் உற்சாகமாக வரவேற்றனர்.சாரட்டு வண்டியுடன் பொதுமக்கள் பள்ளிக்கு சீர்வரிசையாக கொண்டு சென்ற காட்சி அப்பகுதி பொதுமக்களிடையே பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது....