பென்னாகரம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் பரிசல் ஓட்டிகள் ஆர்ப்பாட்டம்
பென்னாகரம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஒகேனக்கல் பரிசல் ஓட்டிகள் புதியதாக பரிசல் ஓட்டுநர் உரிமம் வழங்கக் கூடாது எனக் கூறி ஆர்பாட்டம்.
தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்த்தில் ஒகேனக்கல் பரிசல் ஓட்டிகள் ஓட்டும் உரிமம் வழங்க வேண்டாம் என ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஒகேனக்கல் சுற்றுலா தளத்தில் தினந்தோறும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்வது வழக்கம். இந்த நிலையில் ஒகேனக்கல் பகுதியில் உள்ள கட்சிக்காரர்கள் மூலம் பரிசல் இயக்க தெரியாத இளைஞர்கள் மற்றும் கட்சிக்காரர்களுக்கு என பரிசல் ஓட்டுவதற்கு உரிமை பெற்று தருவதாக கூறி பணம் வசூல் செய்யும் நிகழ்வு நடைபெற்று வருகின்றது. அதேபோல கட்சி வேண்டியவர்களை பொறுப்பாளராக உள்ளவர்களை வைத்து அதிகாரிகளுக்கு அழுத்தம் கொடுப்பது அதிகரித்து வருகின்றது. எனவே இதனை அறிந்த பார்சல் ஓட்டிகள் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு 400க்கும் மேற்பட்ட பார்சல் ஓட்டும் தொழிலாளர்கள் முற்றுகையில் ஈடுபட்டனர். அப்போது அலுவலரிடம் புதியதாக வழங்கப்படும் பரிசல் ஓட்டுநர் உரிமத்தை வழங்க வேண்டாம் என்று கோரிக்கை வைத்து அவ்வாறு வழங்கினால் பரிசல் ஓட்டைகளின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் சுற்றுலா பயணிகள் உயிருக்கு ஆபத்து ஏற்படும் சூழல் உள்ளது என தெரிவித்தனர். அவர்களின் கோரிக்கையை ஏற்று மாவட்ட ஆட்சியரின் உத்தரவு இல்லாமல் யாருக்கும் முடிவும் வழங்கப்படாது என்று அலுவலர்கள் வாக்குறுதி அளித்ததை தொடர்ந்து முற்றுகையில் ஈடுபட்ட பரிசல் ஓட்டிகள் கலைந்து சென்றனர்.
Next Story