ஒகேனக்கல்லில் பரிசல் இயக்கம் நிறுத்தம்

ஒகேனக்கல் பரிசல் துறையில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளதால் இன்று ஒரு நாள் பரிசல் இயக்கம் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது
தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட ஒகேனக்கல் காவிரி ஆற்றில் வினாடிக்கு தற்போது 300 கன அடி தண்ணீர் வந்து கொண்டுள்ளது. இதனால் காவேரி ஆறு குட்டை போல் காணப்பட்டு பல்வேறு இடங்களில் வறண்ட பாறைகள் காணப்பட்டு வருகின்றன. மேலும் நீர்வரத்து குறைந்ததால் சுற்றுலா பயணிகள் வரத்தும் சரிந்துள்ளது. எப்போதும் மக்கள் கூட்டம் அதிகரித்து காணப்படும் இடங்களான தொங்கும் பாலம்,மெயின் பால்ஸ், ஐந்தருவி, முதலைபண்ணை உள்ளிட்ட பகுதிகளில் மக்கள் நடமாட்டம் இன்றி வெறிச்சோடி காணப்படுகிறது.மேலும் தற்போது பரிசல் துறையில் பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் பரிசல் இயக்கம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டு உள்ளது இதனால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்தனர்.

Tags

Next Story