கலைஞர் பூங்காவிற்கு வாகனம் நிறுத்தம் தேவை!

கலைஞர் பூங்காவிற்கு வாகனம் நிறுத்தம் தேவை!

பூங்கா

கலைஞர் பூங்காவுக்கு மக்களின் வருகை அதிகரித்துள்ளதால், சாலையில் போக்குவரத்துக்கு இடையூறில்லாத வகையில் வாகன நிறுத்தம் அமைக்க பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.

புதுக்கோட்டை நகரில் பேருந்து நிலையத்துக்கு அருகே சத்தியமூர்த்தி சாலையில் ரூ. 9 கோடியில் அமைக்கப்பட்டுள்ள கலைஞர் பூங்காவுக்கு மக்களின் வருகை அதிகரித்துள்ளதால், சாலையில் போக்குவரத்துக்கு இடையூறில்லாத வகையில் வாகன நிறுத்தம் அமைக்க பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.

இந்தப் பூங்காவுக்குள் சிறார் பூங்கா, அறிவியல் பூங்கா, டி திரையரங்கு, லேசர்டி திரையரங்கு, லேசர் ஒளிப்பூங்கா, யோகா மையம், ஸ்கேட்டிங் திடல், மூலிகைத் தோட்டம் உள்ளிட்ட ஏராளமான அம்சங்கள் இடம்பெற்றுள்ளன.

புதுக்கோட்டை நகரிலுள்ள காந்திப் பூங்கா, பேருந்து நிலையம் அருகேயுள்ள வைபை பூங்கா ஆகியனகுறைந்த பரப்பளவில் உள்ள நிலையில், மக்களைக் கவரும் வகையில் ஏராளமான விளையாட்டு உபகரணங்கள் உள்ள இந்தப் பூங்காவுக்கு மக்கள் மத்தியில் அமோக வரவேற்பு காணப்படுகிறது.

அதிலும் குறிப்பாக வெயில் காலத்தில் மாலை நேரத்தில் வெளியே வந்தே ஆக வேண்டிய சூழலில் இருக்கும் மக்கள், பள்ளி விடுமுறைக் காலம் என்பதால் கூடுதல் ஆர்வத்துடன் குவிந்து வருகின்றனர்.இரவு சுமார் 7 மணிக்கு இந்தப் பகுதி திருவிழாக்கூட்டம் போல காணப்படும். இந்தச் சூழலில் சுமார் 25-க்கும் மேற்பட்ட கார்கள் சத்தியமூர்த்தி சாலையிலேயே நிறுத்தப்படுகின்றன. நூற்றுக்கணக்கான இருசக்கர வாகனங்களும் அதே சாலையில் நிறுத்தப்படுகின்றன.

சில நேரங்களில் பேருந்து நிலையத்துக்கு வந்து செல்லும் பேருந்துகள் இப்பூங்கா பகுதியைக் கடக்கபெரும் சிரமத்தைச் சந்திக்க வேண்டிய சூழலும் ஏற்படுகிறது. பூங்கா ஓரத்திலுள்ள வாய்க்காலை முறையாகக் கட்டி மேல்பகுதியில் கார்களை நிறுத்த ஏற்பாடுகளைச் செய்யலாம். அல்லது கலைஞர் கருணாநிதி அரசு மகளிர் கல்லூரி வளாகத்தில் பயன்படுத்தப்படாமல் உள்ள பகுதியை உரிய அனுமதி பெற்று சுத்தம் செய்து தற்காலிக வாகன நிறுத்தம் செய்ய வேண்டும் என்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

இதன் மூலம் இச்சாலையில் போக்குவரத்து நெரிசல், விபத்து ஏற்படுவதைத் தவிர்ப்பதுடன், கூடுதலாக மக்கள் தாராளமாக வந்து செல்வதற்கும் வாய்ப்பாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Tags

Read MoreRead Less
Next Story