உதயகிரி கோட்டையில் ரூ.3.24 கோடியில் பூங்கா பணி
அமைச்சர் அடிக்கல் நாட்டினார்.
உதயகிரி கோட்டையில் ரூ.3.24 கோடியில் பூங்கா பணியை அமைச்சர் துவக்கி வைத்தார்,
கன்னியாகுமரி மாவட்டம் பத்மநாபபுரம் நகராட்சிக்குட்பட்ட உதயகிரிகோட்டை வளாகத்தில் அரியவகை வண்ண பறவைகள் தங்குவதற்கான புதிய பூங்கா அமைக்கும் பணியினை பால்வளத்துறை அமைச்சர் த.மனோ தங்கராஜ் இன்று (26.01.2024) துவக்கி வைத்தார். தொடர்ந்து அவர் தெரிவிக்கையில்:- பல நூற்றாண்டுகள் பழமை வாய்ந்த உதயகிரிகோட்டையினை சுற்றுலா பயணிகள் அதிகமாக பார்வையிடும் வகையில் உதயகிரிகோட்டை வளாகத்தில் புதிய பூங்கா அமைக்கப்பட்டுள்ளதோடு, பல ஆண்டுகளாக பாரமாரிப்பு அற்று இருந்த குளமானது தற்போது தூர்வாரப்பட்டுள்ளது. இந்த வளாகத்தில் தற்போது ஒரு சில பறவைகள் மற்றும் விலங்குகள் மட்டுமே பராமரிக்கப்பட்டு வருகிறது. இவற்றினை இன்றைய தினம் மூலதன மானிய நிதி 2022- 2023 திட்டத்தின் கீழ் ரூ.3.24 கோடி மதிப்பில் 25,000 சதுர அடியில் அரிய வகை பறவைகள் தங்குவதற்கான பூங்கா அமைக்கும் பணி துவக்கி வைக்கப்பட்டுள்ளது. இப்பணிகள் நிறைவடைந்து பயன்பாட்டு வரும் பொழுது நமது கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள பறவைகளை தவிர்த்து இந்தியா மற்றும் உலக நாடுகளில் உள்ள அரிய வகை பறவைகள் இயற்கையான சூழலில் தங்குவதற்கு வழிவகை செய்யுமாறு அமையும். இவ்வாறுஅமைச்சர் தெரிவித்தார். இந்நிகழ்ச்சியல் பத்மநாபபுரம் நகர்மன்ற தலைவர் அருள் சோபன், நகராட்சி ஆணையர் லெனின், நகர்மன்ற உறுப்பினர்கள் உட்பட பலர் கலந்து கொண்டார்கள்.
Next Story