நாடாளுமன்ற வேட்பாளர்கள் தொழில் துறையினருடன் கலந்துரையாடல்

நாடாளுமன்ற வேட்பாளர்கள் தொழில் துறையினருடன் கலந்துரையாடல்

திருப்பூர் மற்றும் கோவை நாடாளுமன்ற வேட்பாளர்கள் தொழில்துறையினருக்கு இடையே கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெற்றது.

திருப்பூர் மற்றும் கோவை நாடாளுமன்ற வேட்பாளர்கள் தொழில்துறையினருக்கு இடையே கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெற்றது.

திருப்பூர் தாராபுரம் ரோட்டில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில், அதிமுகவின் தலைமை நிலையச்செயலாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சிக்கொறடாவுமான எஸ்.பி.வேலுமணி தலைமையில், கோவை பாராளுமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் சிங்கை ராமச்சந்திரன், திருப்பூர் தொகுதி அதிமுக வேட்பாளர் அருணாச்சலம் ஆகியோருடன் திருப்பூரை சார்ந்த தொழில் அமைப்பினர் கலந்துரையாடல் நிகழ்வு நடைபெற்றது.

திருப்பூர் மாநகர் மாவட்ட கழக செயலாளரும், முன்னாள் துணை சபாநாயகருமான பொள்ளாச்சி வி.ஜெயராமன், கழக அமைப்புச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான எம்.எஸ்.எம்.ஆனந்தன், திருப்பூர் ஒன்றிய கழக செயலாளரும், திருப்பூர் வடக்கு எம்.எல்.ஏ.,வுமான கே.என்.விஜயகுமார், கழக அம்மா பேரவை இணை செயலாளரும், முன்னாள் எம்.எல்.ஏ., வுமான சு.குணசேகரன், பெருந்துறை எம்.எல்.ஏ., ஜெயக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தார்கள். இந்த கூட்டத்தில் திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்கம், சைமா சங்கம், டையிங் சங்கம் உள்பட 19 சங்கங்களின் பிரதிநிதிகள் கலந்து கொண்டு தொழில் அமைப்பினருக்கு தேவையான கோரிக்கைகள் குறித்து எடுத்துரைத்தனர்.

இதைத்தொடர்ந்து அதிமுகவின் தலைமை நிலையச்செயலாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சிக்கொறடாவுமான எஸ்.பி.வேலுமணி பேசியதாவது: புரட்சித்தலைவி அம்மா அவர்களின் காலத்தில் இருந்து திருப்பூர் தொழிலுக்காக அதிமுக பாடுபட்டு கொண்டு இருக்கிறது. 2011ல் வட்டியில்லா கடனாக 200 கோடி ரூபாய் கொடுத்து தொழிலை காப்பாற்றியது. அதிமுக வேட்பாளர்கள் வெற்றி பெற்றால் தொழில் துறையினரின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும். தொழில் துறையினரின் பிரச்சினையாக இருக்கக்கூடிய மின்கட்டணம், பீக் ஹவர் கட்டணம் பிரச்சினைகளுக்காக அதிமுக மனிதச்சங்கிலி நடத்தியது. திமுகவில் 38 எம்.பி.,க்கள் இருந்தும் தொழில் பிரச்சினைகளுக்கு தீர்வு காணவில்லை. தொழில் துறையினரின் கோரிக்கைகளை கொண்டு சேர்க்கும் வண்னம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கொண்ட குழு அமைத்து தொழில் துறையினரின் பிரச்சினைகளை கேட்கச் செய்வோம்.

பனியன் சந்தை அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும். வர்த்தக மையம் அமைக்க உறுதுணையாக இருப்போம். திருப்பூர் வரை மோனோ ரயில் திட்டத்தை செயல்படுத்த முயன்றது எடப்பாடியார் தலைமையிலான அரசு தான். பங்களாதேஷ் துணிகள் இறக்குமதிக்கு கட்டுப்பாடுகள் கொண்டுவரப்படும். மெட்ரோ ரயில் அமைக்க முயற்சி மேற்கொள்வோம். ஏர்போர்ட் விரிவாக்கம், துபாய் செல்லும் விமானங்கள் வந்து செல்லும் வசதி, கோவை விமான நிலையத்திலேயே சரக்கு முனைய வசதிகளை ஏற்படுத்த நடவடிக்கை எடுப்போம். இதுபற்றி ஏற்கனவே சட்டமன்றத்திலும் பேசி இருக்கிறேன். யார் வந்தாலும் பிரச்சினையை கேட்டறிந்து சம்பந்தப்பட்ட துறை அமைச்சரிடம் கொண்டு செல்லப்படும்.

பஞ்சு, நூல் விலைக்கு தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்படும். சோலார் பவர் சம்பந்தமான விதிமுறைகள் தளர்த்த நடவடிக்கை எடுப்போம். ஜி.எஸ்.டி., அபராத பிரச்சினைகளை சரி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும். நொய்யல் ஆற்றை சீர்படுத்த அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்படும். இன்னும் தொழில் அமைப்பினரின் பிரச்சினைகளை முழுமையாக கேட்டறிந்து தீர்த்து வைப்போம். இந்த தேர்தலில் திமுகவுக்கும் அதிமுகவுக்கும் தான் போட்டி. எனவே கோவை பாராளுமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் சிங்கை ராமச்சந்திரன், திருப்பூர் தொகுதி அதிமுக வேட்பாளர் அருணாச்சலம் ஆகியோருக்கு இரட்டை இலை சின்னத்தில் வாக்களியுங்கள் என்றார். தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசியவர், எடப்பாடியார் ஆணைப்படி, கோவை தொகுதிக்கு சிங்கை ராமச்சந்திரன் திருப்பூரில் அருணாச்சலமும் களத்தில் போட்டியிடுகிரார்கள்.

இன்றைக்கு இரண்டு பேருமே வெற்றி வேட்பாளர்களாக இருக்கிறார்கள். திருப்பூர் முக்கியமான தொழில் நகரம். பனியன் தொழில் அமைப்புகள் 20க்கும் மேற்பட்ட சங்கங்களை சந்தித்து ஆதரவு கோரி இருக்கிறோம். இரண்டு வேட்பாளர்களும் ஆதரவை கேட்டார்கள். அம்மா அவர்கள் இருக்கும் போது, திருப்பூர் தொழிலுக்காக வட்டியில்லா கடனாக 200 கோடி ரூபாய் தந்தார்கள். அதே போல திருப்பூர் மாவட்டத்துக்கு அடிப்படை வசதிகளை செய்து தந்து இருக்கிறோம். திருப்பூரில் மிகப்பெரிய ஆதரவு இருக்கிறது. திருப்பூர் தொகுதியில் உள்ள ஆறு சட்டமன்ற தொகுதி மக்களும் ஆதரவு அளிக்கிறார்கள்.

அருணாச்சலம் வெற்றி உறுதி கோவை நாடாளுமன்ற தொகுதியில் மக்களிடம் பெரும் வரவேற்பு இருக்கிறது. 3 ஆண்டுகளாக திமுக ஆட்சியில் மக்கள் சிரமப்பட்டு இருக்கிறார்கள். மக்கள் எடப்பாடியார் ஆட்சி வர வேண்டும் என நினைக்கிறார்கள். நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி உறுதி. மேகதாது அணையை கட்ட கர்நாடக முயற்சி மேற்கொண்டு இருக்கிறார்கள். மத்திய அரசும், திமுக அரசும் அதில் உடனடியாக கவனம் செலுத்த வேண்டும் என்றார்.

Tags

Next Story