திமுக சார்பில் நாடாளுமன்ற தொகுதி பரப்பரை கூட்டம்
பரப்புரை கூட்டம்
தர்மபுரி வள்ளலார் மைதானத்தில் தர்மபுரி நாடாளுமன்ற தொகுதி சார்பில் பரப்புரை கூட்டம் நேற்று இரவு நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு தருமபுரி கிழக்கு மாவட்ட கழக செயலாளர் தடங்கம் பெ. சுப்ரமணி அவர்கள் தலைமையில் தர்மபுரி நகர கழக செயலாளர் நாட்டான்மாது அவர்கள் வரவேற்புரையில் கழக உயர்நிலை செயல்திட்ட குழு உறுப்பினர் எஸ்.ஜெகத்ரட்சகன் சிறப்புரையாற்றினார். தருமபுரி மேற்கு மாவட்ட கழக செயலாளர் பி.பழனியப்பன் M.Sc,Phd,தருமபுரி நாடாளுமன்ற உறுப்பினர் S.செந்தில்குமார் MP,மாநில ஐடி விங் துணை செயலாளர் Dr.AK.தருண் ஆகியோர் பாசிசம் வீழட்டும் இந்தியா வெல்லட்டும் என்ற முழக்கத்ததுடன் உரையாற்றினர்.
தர்மபுரி மேற்கு மாவட்ட கழக துணை செயலாளர் வழக்கறிஞர் ஆ.மணி, காரிமங்கலம் ஒன்றிய குழு தலைவர் பிசிஆர் மனோகரன், தர்மபுரி நகர் மன்ற தலைவர் லட்சுமி நாட்டான் மாது, நகர மன்ற உறுப்பினர்கள் மாதேஸ்வரன், ஜெகன், பாலசுப்பிரமணியன், பாண்டியன், வாசுதேவன் ,முல்லைவேந்தன் தகவல் தொழில்நுட்ப பிரிவு அமைப்பாளர் கௌதம் உதயசூரியன் மற்றும் கட்சி நிர்வாகிகள் உடன் இருந்தனர்.
இந்த கூட்டத்தில் வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் திமுக அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற செய்ய வேண்டும், அதற்கு கட்சி தொண்டர்கள் சிறப்பாக பணியாற்றி தமிழக அரசு சாதனைகளை பொதுமக்களிடையே தெரிவித்து வாக்குகளை பெற்று தமிழ்நாட்டிலே தர்மபுரி மாவட்டத்தில் அதிகமாக வித்தியாசத்தில் வெற்றி பெற செய்ய வேண்டும், என்று கழக உயர்நிலை செயல்திட்ட குழு உறுப்பினர் எஸ்.ஜெகத்ரட்சகன் பேசினார்.
நிகழ்ச்சியில் தஎமபுரி நாடாளுமன்ற தொகுதி மாநில, மாவட்ட, ஒன்றிய, பேரூர் கழக நிர்வாகிகள்,சார்பு அணி பொறுப்பார்கள் மற்றும் மகளிர், இளைஞர், பொதுமக்கள் கலந்துக்கொண்டு சிறப்பித்தனர்.