தேர்தல் எதிரொலி; விளம்பர போர்டுகளை அகற்றும் பணி தீவிரம்

நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு திருவண்ணாமலையில் விளம்பர போர்டுகள், சுவர் விளம்பரங்களை நீக்கும் பணி தீவிரமாக நடக்கிறது.

திருவண்ணாமலை மாவட்டத்தில் ஏற்கெனவே எழுதப்பட்டுள்ள அரசியல் கட்சிகளின் விளம்பரங்களை அழிக்கும் பணியில், வருவாய்த்துறை அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். தமிழகத்தில் மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப் பதிவு ஏப்ரல் 19-ஆம் தேதி நடைபெறும் என்று இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதன் மூலம் தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளதால் திருவண்ணாமலை மாவட்டம் முழுவதும் ஏற்கெனவே எழுதப்பட்டுள்ள அரசியல் கட்சிகளின் விளம்பரங்களை அழிக்கும் பணியில் வருவாய்த்துறை அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.

பொது இடங்களில் வைக்கப்பட்டுள்ள கட்சி விளம்பரப் பதாகைகளை அகற்றுவது, பொது மற்றும் தனி நபர்களின் சுவர்களில் எழுதப்பட்டுள்ள கட்சி விளம்பரங்களை அழிப்பது போன்ற பணிகளில் அந்தந்த வட்டங்களைச் சேர்ந்த வாக்குச்சாவடி நிலைய அலுவலர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். செங்கம், செங்கம் துக்காப்பேட்டையில் இருந்த முன்னாள் முதல்வர்கள் அண்ணா, எம்ஜிஆர் சிலைகளை மூடி நகரில் இருந்த டிஜிட்டல் பதாகைகள், சுவர் விளம்பரங்களை அகற்றும் பணியில் வருவாய்த் துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்.

Tags

Next Story