நாடாளுமன்றத் தேர்தல்; துணை ராணுவ வீரர்கள் வருகை

நாடாளுமன்றத் தேர்தல்; துணை ராணுவ வீரர்கள் வருகை

 நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு சேலத்திற்கு துணை ராணுவத்தை சேர்ந்த 92 வீரர்கள் பாதுகாப்பு பணிக்கு வந்தனர்.  

நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு சேலத்திற்கு துணை ராணுவத்தை சேர்ந்த 92 வீரர்கள் பாதுகாப்பு பணிக்கு வந்தனர்.

தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. இதற்கான முன்னேற்பாடு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இதையொட்டி தேர்தல் பாதுகாப்புக்காக 200 கம்பெனி துணை ராணுவ படையினர் வரவழைக்கப்பட உள்ளனர். இதில், முதற்கட்டமாக நேற்று 25 கம்பெனி துணை ராணுவ படையினர் தமிழகத்திற்கு வந்து பல்வேறு மாவட்டங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

அதாவது, கேரள மாநிலம் கொச்சியில் இருந்து கோவைக்கு நேற்று மதியம் ஒரு மணியளவில் உதவி கமிஷனர் ஸ்ரீஜெயந்த குமார் தலைமையில் ஸ்ரீதர், வாசுதேவன், சினிலால் கொண்ட 275 பேர் அடங்கிய 3 கம்பெனி துணை ராணுவத்தினர் ரெயிலில் வந்தனர் அவர்களில் மத்திய தொழிற்பாதுகாப்பு படையை சேர்ந்த 92 வீரர்கள் போலீஸ் வாகனங்கள் மூலம் நேற்று இரவு சேலம் மாநகரத்திற்கு வந்தனர். அவர்களை மாநகர போலீஸ் தேர்தல் பிரிவு அதிகாரிகள் வரவேற்றனர். பின்னர் துணை ராணுவத்தினர் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட அஸ்தம்பட்டி சி.எஸ்.ஐ. சமுதாய கூடத்திற்கு வந்து தங்கினர். அவர்களுக்கு தேவையான உணவு மற்றும் தங்குமிடம் வசதிகளை போலீஸ் உயர் அதிகாரிகள் செய்து கொடுத்துள்ளனர்.

இதுகுறித்து சேலம் மாநகர போலீஸ் அதிகாரிகள் கூறும்போது, ‘கொச்சியில் இருந்து கோவைக்கு வந்து அதன்பிறகு அங்கிருந்து சேலத்திற்கு மத்திய தொழிற்பாதுகாப்பு படையை சேர்ந்த 92 வீரர்கள் வந்துள்ளனர். நாடாளுமன்ற தேர்தல் தேதி குறித்து எப்போது வேண்டுமானாலும் அறிவிப்பு வெளியாகலாம். எனவே தேர்தல் முன்னேற்பாடுகள் அனைத்தும் தீவிரமாக நடந்து வருகின்றன. சேலத்திற்கு வந்துள்ள துணை ராணுவத்தினர் தேர்தல் தேதி அறிவித்ததில் இருந்து வாக்குப்பதிவு, வாக்கு எண்ணிக்கை மற்றும் முடிவுகள் அறிவிப்பு வரை பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள்’ என்றனர்.

Tags

Next Story