நாடாளுமன்ற தேர்தல்: சிறப்பு பேருந்துகள் இயக்கம்
பஸ்கள்
நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு 17.04.2024 மற்றும் 18.04.2024 ஆகிய நாட்களுக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என போக்குவரத்துத்துறை தெரிவித்துள்ளது.
நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு பொது மக்கள் தங்களது சொந்த ஊருக்கு சென்று வாக்களிக்க ஏதுவாக வருகின்ற 17.04.2024 மற்றும் 18.04.2024 ஆகிய நாட்களுக்கு ஈரோட்டிலிருந்து நாமக்கல், கரூர், சேலம், கோவை, திருச்சி, மதுரை, போன்ற ஊர்களுக்கு தற்போது இயங்கும் பேருந்துகளுடன் கூடுதலாக 75 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என ஈரோடு மண்டல பொதுமேலாளர் தெரிவித்துள்ளார்.
Next Story