திருப்பூரில் இட்லி மாஸ்டரை கொலை செய்த பரோட்டாமாஸ்டர் கைது

X
கைது
திருப்பூரில் இட்லி மாஸ்டரை கொலை செய்த புரோட்டா மாஸ்டர் கைது. ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்தவர் கணேசன்(40). இட்லி மாஸ்டர். தூத்துக்குடியை சேர்ந்தவர் நாகராஜன் (48). புரோட்டா மாஸ்டர். திருப்பூர் பல்லடம் சாலை தென்னம்பாளையத்தில் உள்ள உணவகத்தில் தங்கி இருவரும் வேலை செய்து வந்தனர். இந்நிலையில் கடந்த 4-ம் தேதி இரவு மதுபோதையில் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதையடுத்து அன்றிரவு நாகராஜன், தூங்கிக்கொண்டிருந்த கணேசன் தலையில் கல்லை தூக்கி போட்டார். படுகாயம் அடைந்த கணேசன் திருப்பூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் கணேசன் நேற்று உயிரிழந்தார். இதையடுத்து தெற்கு போலீஸார் கொலை வழக்கு பதிந்து நாகராஜனை கைது செய்தனர்.
Tags
Next Story
