பகுதிநேர நியாய விலைகடை: எம்எல்ஏ. திறப்பு
நியாவிலை கடையை திறந்து வைத்த எம்எல்ஏ
கன்னியாகுமரி மாவட்டம் கிள்ளியூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட, வாவறை ஊராட்சி, பணமுகம் பகுதி மக்கள் ஆலங்கோடு பகுதியில் உள்ள 28/DB 031 எண்ணுடைய நியாய விலை கடையை பிரித்து, பணமுகம் பகுதியில் புதிதாக ஒரு பகுதி நேர நியாய விலை கடை அமைக்க கிள்ளியூர் சட்டமன்ற உறுப்பினர் ராஜேஷ் குமாரிடம் கோரிக்கை மனு அளித்தனர்.
இது தொடர்பாக சம்மந்தபட்ட துறையிடம் வைத்த கோரிக்கையின் அடிப்படையில், சம்மந்தபட்ட நியாய விலை கடையை பிரித்து பணமுகம் பகுதியில் புதிதாக பகுதி நேர நியாய விலை கடை அமைக்கப்பட்டுள்ளது. இந்த புதிய பகுதி நேர நியாய விலை கடையை ராஜேஷ்குமார் எம்.எல்.ஏ. இன்று திறந்து வைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கு உணவு பொருட்களை வழங்கினார்.
நிகழ்சியில் வாவறை ஊராட்சி மன்ற தலைவர் மெற்றில்டா, முஞ்சிறை மேற்கு வட்டார காங்கிரஸ் கமிட்டி தலைவர் விஜயகுமார், மாநில பொதுச்செயலாளர் பால்ராஜ், ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர்கள் வென்சஸ்லாஸ், கிறிஸ்டல் பாய், மாவட்ட பஞ்சாயத்து உறுப்பினர் லூயிஸ் மற்றும் பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.