பகுதிநேர நியாயவிலை கடை – எம்எல்ஏ திறப்பு

பகுதிநேர நியாயவிலை கடை – எம்எல்ஏ திறப்பு
X

பகுதி நேர நியாவிலைகடை திறப்பு

நாமக்கல் மாவட்டம், காவேட்டிப்பட்டி சிட்கோ காலனியில் பகுதிநேர ரேஷன் கடையை நாமக்கல் எம்எல்ஏ திறந்து வைத்தார்.

நாமக்கல் மாவட்டம், கொண்டிசெட்டிப்பட்டி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்திற்கு உட்பட்ட காவேட்டிப்பட்டி நியாயவிலைக் கடையின் மூலம் 913 குடும்ப அட்டைதாரர்களுக்கு குடிமை பொருட்கள் வழங்கப்பட்டு வந்தது. அவற்றிலிருந்து 240 குடும்ப அட்டைகளை தனியாக பிரித்து சிட்கோ காலனியில் அப்பகுதி மக்கள் பயன்பெறும் வகையில் பகுதிநேர நியாய விலைக் கடை திறக்கப்பட்டது.

அக்கடையினை கூட்டுறவு இணை பதிவாளர் அருளரசு தலைமையில் நாமக்கல் நகர்மன்ற தலைவர் கலாநிதி, துணைத் தலைவர், கிழக்கு நகர கழக செயலாளர் பூபதி, நகர்மன்ற உறுப்பினர், மேற்கு நகர கழக செயலாளர் சிவக்குமார் ஆகியோர் முன்னிலையில் நாமக்கல் சட்டமன்ற உறுப்பினர் பெ.ராமலிங்கம் எம்எல்ஏ திறந்து வைத்து பொதுமக்களுக்கு குடிமைப் பொருட்களை வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில் நகர்மன்ற உறுப்பினர்கள் தனசேகர், குட்டி(எ) செல்வகுமார், நாமக்கல் ஒன்றிய கழக செயலாளர் பழனிவேலு, இளைஞரணி துணை அமைப்பாளர் நல்லத்தம்பி, வார்டு பிரதிநிதி பிரகாஷ், தனி வட்டாச்சியர் (குடிமைப் பொருள்) சின்னத்தம்பி, கூட்டுறவு சார் பதிவாளர் சுரேஷ், கள அலுவலர் பாலசுப்பிரமணியம், மற்றும் கடை விற்பனையாளர்கள் ஊர் பொதுமக்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

Tags

Next Story