பகுதிநேர ரேஷன்கடை திறப்பு!

பகுதிநேர ரேஷன்கடை திறப்பு!

திறப்பு

பகுதிநேர ரேஷன்கடை திறக்கப்பட்டுள்ளது.

புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை ஒன்றியம் என்.கீழப் பட்டியில் கூட்டுறவு துறை சார்பில், புதிய பகுதிநேர அங்காடி திறப்பு விழா நடந்தது. சட்டத்துறை அமைச்சர் ரகுபதி பகுதி நேர அங்காடியை திறந்து வைத்து கார்டுதாரர்களுக்கு அத்தியாவசிய பொருட் களை வழங்கினார்.

எட்டுக்கால்பட்டி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க கட்டுப்பாட்டில் உள்ள தொண்டைமான்நல்லூர் அங்காடியில் இருந்து பிரிக்கப்பட்டுள்ள இந்த கடை 181 குடும்பஅட்டைகளுடன் வாரந்தோறும் சனிக்கிழமை இயங்கும் என்று தெரிவிக்கப்பட்டது.

திமுக வடக்கு மாவட்ட செய லாளர் செல்லப்பாண்டியன், விராலிமலை ஒன்றியக்குழுத் தலைவர் காமு மணி, ஒன்றிய கவுன்சிலர் சத்யசீலன், தாசில்தார் காமராஜ் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

Tags

Next Story