25வது வார்டில் திமுக மாமன்ற உறுப்பினர் தலைமையில் பகுதி சபா கூட்டம்
25வது வார்டில் திமுக மாமன்ற உறுப்பினர் தலைமையில் பகுதி சபா கூட்டம்
பொதுமக்கள் கோரிக்கை மனுக்களை மேயரிடம் அளித்தனர்
திருச்சி 25வது வார்டில் திமுக மாமன்ற உறுப்பினர் நாகராஜன் தலைமையில் பகுதி சபா கூட்டம் நடைபெற்றது. மனித உரிமை தினத்தை முன்னிட்டு மாநகராட்சி வார்டுகளில் பகுதி சபா கூட்டம் நடைபெற்றது. இந்த வகையில் திருச்சி மாநகராட்சி கோ-அபிஷேகபுரம் மண்டலம் 2க்கு உட்பட்ட 25வது வார்டில் பகுதி சபா கூட்டம் மாமன்ற உறுப்பினர் நாகராஜன் தலைமையில் நடைபெற்றது.திருச்சி உய்யக்கொண்டான் திருமலை யோகலட்சுமி திருமண மண்டபத்தில் நடைபெற்ற இந்தப் பகுதி சபா கூட்டத்தில் மேயர் அன்பழகன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார். திருச்சி 25வது வார்டை சேர்ந்த பொதுமக்கள் தங்களது அடிப்படை தேவை கோரிக்கைகளை மனுக்களாக மேயர் அன்பழகனிடம் அளித்தனர். தொடர்ந்து மக்களின் கோரிக்கைகள் படிப்படியாக நிறைவேற்றப்படும் என்று மாநகராட்சி மேயர் அன்பழகன், மாமன்ற உறுப்பினர் நாகராஜன் ஆகியோர் பொதுமக்களுக்கு உறுதியளித்தனர். இந்த நிகழ்ச்சியில் மாநகராட்சி அலுவலர்கள், பணியாளர்கள், திமுக நிர்வாகிகள், வார்டு மக்கள், குடியிருப்பு நல சங்க நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
Next Story