நிதி நிறுவன மோசடி வழக்கில் திருச்சியைச் சேர்ந்த பங்குதாரர் கைது

நிதி நிறுவன மோசடி வழக்கில் திருச்சியைச் சேர்ந்த பங்குதாரர் கைது
கைது
நிதி நிறுவன மோசடி வழக்கில் திருச்சியைச் சேர்ந்த பங்குதாரரை தஞ்சாவூர் பொருளாதார குற்றப்பிரிவு காவ‌ல்துறை‌யின‌ர் நேற்று கைது செய்தனர்.

திருச்சியை தலைமையிடமாக கொண்ட சங்கமம் பெனிபிட் பண்ட் என்ற நிதி நிறுவனம், தஞ்சாவூர், கும்பகோணம், நாமக்கல் ஆகிய இடங்களில் கிளைகளை திறந்து முதலீட்டாளர்களிடமிருந்து நிதியை பெற்றது. இந்த நிதி நிறுவனத்தில் முதலீடு செய்த முதலீட்டாளர்கள் 20 பேர், ரூ.1.89 கோடியை முதலீடாகப் பெற்று ஏமாற்றியதாக நிறுவனத்தின் பங்குதாரர்கள் மீது கடந்த 2019 ஆம் ஆண்டு புகார் செய்தனர்.

இந்த வழக்கு, தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் மேற்கு காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்டு, பின்னர் தஞ்சாவூர் மாவட்ட பொருளாதார குற்றப்பிரிவுக்கு மாற்றப்பட்டது. இந்த வழக்கில் பங்குதாரர்கள் பார்த்திபன், சுகந்தா தேவி, ராஜேஷ், ராமதாஸ், சரவணன், ராஜேஸ்வரி ஆகியோர் ஏற்கெனவே கைது செய்யப்பட்ட நிலையில், சனிக்கிழமையன்று, நிதி நிறுவனத்தின் பங்குதாரர்களில் ஒருவரான திருச்சி காட்டூர் அம்மன் நகரைச் சேர்ந்த ரா.தண்ணீர்மலை (26) என்பவரை பொருளாதார குற்றப்பிரிவு காவல் ஆய்வாளர் மணிமேகலை, உதவி ஆய்வாளர் செந்தமிழன் தலைமையிலான காவல்துறையினர் கைது செய்து, மதுரையில் உள்ள நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி திருச்சி சிறையில் அடைத்தனர்.

Tags

Next Story