மாதிரி வாக்குப்பதிவு இயந்திரத்தை காண்பித்து பாமக வேட்பாளர் வாக்கு சேகரிப்பு
வாக்கு சேகரிப்பு
தர்மபுரி நகராட்சிக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் தேசிய கூட்டணியின் பாமக வேட்பாளர் சாமி அன்புமணி மாதிரி வாக்குப்பதிவு எந்திரத்தை பொதுமக்களிடம் காண்பித்து மாம்பழம் தினத்திற்கு வாக்கு சேகரித்தார்.
தமிழகம் முழுவதும் வருகின்ற 19ஆம் தேதி வெள்ளிக்கிழமை அன்று நாடாளுமன்றத் தேர்தல் ஒரே கட்டுமாக நடைபெற உள்ளது அதனை முன்னிட்டு இன்றுடன் தேர்தல் பிரச்சாரம் முடிவடைகிறது. இந்த நிலையில் தர்மபுரி நாடாளுமன்ற தொகுதியில் தேசிய கூட்டணி பாமக வேட்பாளர் சௌமியா அன்புமணி தர்மபுரி நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் பொதுமக்களுக்கு தேவையான பல்வேறு நல திட்டங்களான 108 ஆம்புலன்ஸ் சேவை, தர்மபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, மொரப்பூர் ரயில்வே திட்டம், ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை தர்மபுரி மாவட்ட மக்களுக்கு பெற்று தந்த சின்ன மாம்பழ சின்னம்,எனவே நீங்கள் அனைவரும் தவறாமல் மாம்பழம் சின்னத்துக்கு வாக்களிக்க வேண்டும் என்று கூறி மாதிரி வாக்குப்பதிவு எந்திரத்தை காண்பித்து மாம்பழம் சின்னத்திற்கு தீவிர வாக்கு சேகரித்தார். இந்த நிகழ்ச்சியில் பாமக நிர்வாகிகள் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
Next Story