கட்சி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்
சங்ககிரியில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி நிர்வாகிகளுக்கான ஆலோசனைக் கூட்டம் நடந்தது.
சங்ககிரியில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி நிர்வாகிகளுக்கான ஆலோசனைக் கூட்டம் நடந்தது.
சேலம் மாவட்டம் மாவட்டம், சங்ககிரி, எடப்பாடி சட்டமன்ற தொகுதிகளுக்கான வாக்காளர் பட்டியல் திருத்த சிறப்பு முகாமில் பெறப்பட்ட மனுக்கள் குறித்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி நிர்வாகிகளுக்கான ஆலோசனைக்கூட்டம் சங்ககிரி வருவாய் கோட்டாட்சியர் அலுவலக வளாகத்தில் நடைபெற்றது. சங்ககிரி வருவாய் கோட்டாட்சியர லோகநாயகி இக்கூட்டத்திற்கு தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தலின் பேரில் கடந்த நவம்பர் 4,5, 25, 26 ஆகிய தேதிகளில் நடைபெற்று முடிந்த சங்ககிரி, எடப்பாடி சட்டமன்ற தொகுதிகளுக்கான வாக்காளர் பட்டியல் திருத்த சிறப்பு முகாமில் பெறப்பட்ட மனுக்களின் விபரங்கள் குறித்து விளக்கி கூறினார். சிறப்பு முகாம் மற்றும் இணையவழி மூலம் சங்ககிரி சட்டமன்ற தொகுதியில் 6004 விண்ணப்பங்களும், எடப்பாடி சட்டமன்ற தொகுதியில் 6588 விண்ணப்பங்களும் பெறப்பட்டுள்ளன என்வும் மேலும் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கம் செய்தல் உள்ளிட்ட மனுக்கள் மீது உரிய விசாரணை செய்தும், மனுவுடன் சேர்ந்து தாக்கல் செய்துள்ள ஆவணங்களை பரிசிலித்து நடவடிக்கை எடுக்கப்படும் கூறினார். இக்கூட்டத்தில் வட்டாட்சியர்கள் அறிவுடைநம்பி (சங்ககிரி), வைத்தியலிங்கம் (எடப்பாடி), தேர்தல் துணை வட்டாட்சியர்கள் மகேந்திரன் (சங்ககிரி), கர்ணன் (எடப்பாடி), திமுக சேலம் மேற்கு மாவட்டத்தலைவர் தங்கமுத்து, சங்ககிரி அதிமுக நகர செயலர் செல்வம் உள்ளிட்ட அங்கீகரிக்கப்பட்ட பல்வேறு அரசியில் கட்சி நிர்வாகிகள் இதில் கலந்து கொண்டனர்.
Tags
Next Story