முச்சந்தியம்மன் கோவிலில் பார்வேட்டை உற்சவம்

X
முச்சந்தியம்மன்
மாசிமக பார்வேட்டையை முன்னிட்டு வில்லிவலம் முச்சந்தியம்மன் மலர்களால் அலங்கரிக்கப்பட்ட சிம்ம வாகனத்தில் வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.
காஞ்சிபுரம் அடுத்த வில்லிவலம் கிராமத்தில், ஹிந்து சமய அறநிலைய துறை ஆய்வாளர் கட்டுப்பாட்டில், முச்சந்தியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில், ஆண்டுதோறும் மாசிமக பார்வேட்டை உற்சவம் நடைபெறும். நடப்பாண்டு மாசிமக பார்வேட்டை உற்சவம், நேற்று மதியம் 2:00 மணிக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் சந்தன காப்பு அலங்காரம் நடந்தது. அதை தொடர்ந்து, இரவு 8:00 மணிக்கு முயல் விடும் நிகழ்ச்சியும், மலர்களால் அலங்கரிக்கப்பட்ட சிம்ம வாகனத்தில் முச்சந்தியம்மன் வீதியுலா நிகழ்ச்சி நடந்தது."
Next Story
