கடலாடி யூனியன் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றம்

கடலாடி யூனியன் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றம்

யூனியன் கூட்டத்தில் கலந்து கொண்டவர்கள் 

ராமநாதபுரம் கடலாடி யூனியன் பகுதியில் நிவாரணம் வழங்க வேண்டும் எனவும், பழுதடைந்துள்ள சாலைகளை சீர்செய்ய யூனியன் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

ராமநாதபுரம் கடலாடி ஊராட்சி ஒன்றிய கவுன்சில் கூட்டத்தில் மழை வெள்ளத்தில் பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என கடலாடி யூனியன் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டன.

கடலாடி ஊராட்சி ஒன்றிய கவுன்சில் கூட்டம் ஒன்றிய பெரும் தலைவர் முத்துலெட்சுமி முனியசாமிபாண்டியன் தலைமையில் நடைபெற்றது. ஆனையாளர் ஜெய ஆனந்த்முன்னிலை வகித்தார். மொத்தம்| 12 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

குஞ்சரம் (எஸ். தரைக்குடி ) சமீபத்தில் பெய்த மழையாலும் கஞ்சம்பட்டி ஓடையில் ஓடி வந்த வெள்ளத்திலும் எஸ். தரைக்குடி பிர்கா முழுவதும் பாதிக்கப்பட்டுள்ளது 5 ஹெக்டேரில் நெல், மிளகாய்,மல்லி. ஆகியவை அழந்துவிட்டன. நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.முனியசாமிபாண்டியன்(அதிமுக) கடலாடி யூனியன் பகுதி முழுவதும் மழை வெள்ளத்தால் விவசாயம் அழிந்துவிட்டன.

விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் முத்துலெட்சுமி(சேர்மன). கடலாடி யூனியன் பகுதியில் மழைவெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளதால் விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்க வேண்டும்.வி.ஜெயச்சந்திரன் (கருங்குளம்) மீனங்குடி அம்மன் கோவில்தெருவில் பேவர்பிளாக் சாலை அமைக்க வேண்டும் எனவும், சாத்தங்குடி வெள்ளாங்குளம் கிராமத்தில் பேவர் பிளாக் சாலை அமைக்க வேண்டும் என வலியுறுத்தினார். இவ்வாறு விவாதம் நடைபெற்றது

Tags

Next Story