வீரராக்கியம் அருகே அரசு பேருந்திலிருந்து கீழே விழுந்த பயணி படுகாயம்
வீரராக்கியம்
வீரராக்கியம் அருகே அரசு பேருந்திலிருந்து கீழே விழுந்த பயணி படுகாயம். கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட, பாலம்மாள்புரம், கே எம் சி காலனி பகுதியைச் சேர்ந்தவர் மணிகண்டன் வயது 35. இவர் மே 19ஆம் தேதி திருச்சியில் இருந்து கரூர் நோக்கி வந்த அரசு பேருந்தில் பயணம் செய்தார்.
இந்த பேருந்தை கரூர் மாவட்டம், கடவூர் தாலுகா, வெள்ளாளப்பட்டி அருகே உள்ள சின்ன தேவன்பட்டி பகுதியைச் சேர்ந்த முருகதாஸ் வயது 38 என்ற அரசு பேருந்து ஓட்டுனர் ஓட்டி வந்தார். அரசு பேருந்து திருச்சி - கரூர் சாலையில் உள்ள, வீரராக்கியம் ரயில்வே ஸ்டேஷன் அருகே, சாலையில் அமைக்கப்பட்டுள்ள ஸ்பீடு பிரேக்கரில் பேருந்து வேகமாக வந்த போது, பேருந்துக்குள் கம்பியை பிடித்து வந்த மணிகண்டன் எதிர்பாராத நேரத்தில், பேருந்தில் இருந்து சாலையில் கீழே விழுந்து விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் மணிகண்டனுக்கு வலது காலில் பலத்த காயங்கள் ஏற்பட்டதால், உடனடியாக தனியார் ஆம்புலன்ஸ் மூலம், கரூரில் உள்ள ராஜ் ஆர்த்தோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.
இந்த சம்பவம் தொடர்பாக மணிகண்டன் அளித்த புகாரின் பேரில், சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர், அரசு பேருந்தை கவனக்குறைவாக ஓட்டிய முருகதாஸ் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.