பொதுமக்கள் அமைத்த பயணிகள் நிழலகம் - அமைச்சர் திறப்பு

X
குமரி மாவட்டம் பொன்மனை சந்திப்பு பகுதியில் மலைவாழ் மக்கள், மலையோர பகுதிகளில் வாழும் மக்கள் அதிகம் வந்து செல்லும் பகுதியாகும். 12 சிவாலயங்களில் ஒன்றான பிரசித்தி பெற்ற பொன்மனை மகாதேவர் கோயில் இங்கு உள்ளது. இதனால் பக்தர்கள் அதிகம் வருகை தருகின்றனர். இங்கு வரும் பஸ் பயணிகள் வசதிக்காக இங்குள்ள பொதுமக்கள் சேர்ந்து பொன்மனை கிராமீண கிரந்த சாலை பகுதியில் ஜானகி பிள்ளை நினைவு பயணிகள் நிழலகத்தை அமைத்தனர். இந்த பயணிகள் நிழலகத்தை அமைச்சர் மனோதங்கராஜ் திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சிக்கு பொன்மனை கிராமீண கிரந்த சாலை தலைவர் ரமேஷ் குமார் தலைமை வகித்தார். மாவட்ட அரசு வழக்கறிஞர் ஜாண்சன் முன்னிலை வகித்தார். ஓய்வுபெற்ற பேராசிரியர் சிஎம்கே தம்பி வாழ்த்துரை வழங்கினார். இதில் கிராமீண கிரந்த சாலை நிர்வாகிகள், திமுக நிர்வாகிகள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
Next Story
