பாசஞ்சர் ரயில் கட்டணம் பாதியாக குறைப்பு
திருச்சி சந்திப்பு
மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு திருச்சியில் இருந்து செல்லும் பாசஞ்சர் ரயில்களின் கட்டணங்கள் பாதியாக குறைக்கப்பட்டுள்ளதால் பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
கொரோனா காலகட்டத்தில் ஏற்பட்ட வருவாய் இழப்பை சரி செய்யும் வகையில் திருச்சியில் இருந்து செல்லும் பாசஞ்சர் ரயில்களின் கட்டணம் ரூபாய் 10 லிருந்து ரூபாய் 30 ஆக உயர்த்தப்பட்டது. இந்நிலையில் மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு கட்டணம் குறைக்கப்பட்டுள்ளது 200 கிலோ மீட்டருக்குள் இயக்கப்படும் எக்ஸ்பிரஸ் ரயில்கள் பயணிகள் ரயில்களாக மாற்றம் செய்யப்பட்டு கட்டண குறைப்பை ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.
இதன் காரணமாக திருச்சியில் இருந்து கரூர் ,காரைக்குடி ,காரைக்கால், திண்டுக்கல் ,ஈரோடு ,மயிலாடுதுறை, தஞ்சாவூர் ,திருத்துறைப்பூண்டி, மன்னார்குடி, வேளாங்கண்ணி, விருதாச்சலம் இடையே செல்லும் பாசஞ்சர் ரயில்கள் கட்டணங்கள் பாதியாக குறைந்துள்ளது. கட்டணம் குறைக்கப்பட்டுள்ளதால் ரயில் பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
Next Story