பேருந்து எண் மாற்றி மாற்றிக் காட்டப்பட்டதால் பயணிகள் குழப்பம்

அரசு பேருந்தின் எல். இ. டி பெயர் பலகைகள் திடீரென ஊரின் பெயர்களை மாற்றி மாற்றி காட்டியதால் பயணிகள் குழப்பம் அடைந்தனர்.
வார இறுதி நாளான சனி, ஞாயிறு விடுமுறையை முன்னிட்டு சென்னையில் வேலை செய்யும் பொதுமக்கள் தங்களின் சொந்த ஊர்களுக்கு செல்ல இன்றும், நாளையும் 1730 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என போக்குவரத்து துறை தெரிவித்திருந்தது. அதன்படி பல்வேறு ஊர்களுக்கு கிளாம்பாக்கத்தில் இருந்து பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திற்கு பயணிகளோடு வந்து கொண்டிருந்த அரசு பேருந்தின் எல். இ. டி பெயர் பலகைகள் திடீரென ஊரின் பெயர்களை மாற்றி மாற்றி காட்டிய சம்பவம் அரங்கேறி உள்ளது. செங்கல்பட்டு மாவட்டம் கூடுவாஞ்சேரி அருகே அரசு பேருந்து வந்து கொண்டிருந்தபோது, சென்னை, கிளாம்பாக்கம், தாம்பரம், காஞ்சிபுரம், வேலூர், கும்பகோணம், புதுச்சேரி, விழுப்புரம், திண்டிவனம், செங்கல்பட்டு, திருப்பதி, செய்யார், உத்திரமேரூர் என ஐந்து நிமிடத்தில் 13 ஊர்களின் பெயர்களை ஒளிரவிட்டு சென்றதால் பயணிகள் குழப்பமடைந்தனர்.

Tags

Next Story