அடிப்படை வசதி இல்லாத பஸ் நிலையம் ஆவுடையார்கோவில் பயணிகள் வேதனை
பேருந்து இல்லமால் தவித்த பயணிகள்
ஆவுடை யார்கோவிலில் பிரசித்தி பெற்ற ஆத்ம நாதர்சுவாமி கோயில் உள்ளது. திருவாசகம் பிறந்த இந்த கோயிலுக்கு புதுகை மாவட்டம் மட்டுமின்றி தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த பக் தர்களும், வெளிமாநில, வெளிநாட்டு சுற்றுலா பயணிகளும் அதிக அளவில் வருகை தருகின்றனர்.
மேலும், இங்கு தாலுகா அலுவல் கம், ஊராட்சி ஒன்றிய அலுவலகம், பஸ் நிலையம், கல்வி நிறுவனங்கள், வர்த்தக நிறுவனங்கள் உள்ளன. இவற் றுக்கு தினமும் நுாற்றுக்கணக்கானோர் வருகை தருகின்றனர். ஆனால், ஆவு டையார்கோவிலில் புதிய பஸ் நிலையம் கட்டப்பட்டு திறப்பு விழா மட்டுமே நடந்தது.
அதன்பின்னர் பஸ் நிலையம் பயன்பாடின்றி கிடக்கிறது. பஸ் நிலையத்தில் குடிநீர், வாகன நிறுத்தமிடம், பயணிகளின் பொருட்கள் பாதுகாக்கும் அறை, கழிப்பிடம் என்று எந்த வசதி யும் இல்லை. இதனால் வியாபாரிகளோ, பயணிகளோ யாரும் வராததால் பஸ்கள் நிலையத்துக்கள் வராமல் சாலையோரம் பயணிகளை ஏற்றி,
இறக்கி செல்கின்றன. இப்போது கோடைகாலம் என்பதால் சுட்டெரிக்கும் வெயிலில் சாலையோரம் பஸ்சுக்காக மக்கள் காத்திருக்கும் நிலை உள்ளது. இதனால் பெண்கள், முதியவர்கள் கடும் சிரமத்துக்கு உள் ளாகின்றனர். இதை தவிர்க்க ஆவுடை யார்கோவில் பஸ் நிலையத்தில் அடிப்படை வசதிகளை ஏற்படுத்திதர அதிகாரிகள், மக்கள் பிரதிநிதிகள் நட வடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.