நரிக்குடி: துண்டு துண்டாக சிதறிய உடல்
கோப்பு படம்
சென்னை தாம்பரத்திலிருந்து நேற்றிரவு 9 மணிக்கு தாம்பரம் - செங்கோட்டை செல்லும் சிறப்பு விரைவு ரயில் (20683) ஒன்று நேற்றிரவு தாம்பரத்தில் கிளம்பியது. இந்த சிறப்பு விரைவு ரயிலானது மானாமதுரை, நரிக்குடி, அருப்புக்கோட்டை, விருதுநகர் வழியாக செங்கோட்டை செல்லும் சிறப்பு விரைவு ரயில் என கூறப்படும் நிலையில் வாரம் மூன்று நாட்கள் (திங்கள், புதன், வெள்ளி ) சென்று வருவதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் தாம்பரம் - செங்கோட்டை ரயில் இன்று(மே.17) காலை 6:20 மணியளவில் நரிக்குடி ரயில்வே நிலையம் அருகே வந்த போது ரயிலில் படிக்கட்டிலில் பயணம் செய்ததாக கூறப்படும் அடையாளம் தெரியாத 28 வயது மதிக்கத்தக்க ஆண் ரயில் பயணி ஒருவர் ரயில்வே பிளாட்பாரத்தில் கால் தட்டி, நிலை தடுமாறி ஓடும் ரயிலின் உள்ளே விழுந்து ரயில் சக்கரத்தில் சிக்கி உடல்,கை, கால்கள் என பல துண்டுகளாகி பலியானார்.
சம்பவம் குறித்து நரிக்குடி ரயில்வே நிலையத்தில் பாய்ண்ட்ஸ் மேனாக பணிபுரியும் வசந்த்(24) என்பவர் போலீசாருக்கு தகவல் கொடுத்த நிலையில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற திருச்சுழி DSP ஜெகநாதன் ரயிலில் அடிபட்டு உடல் துண்டாகி பலியாகி கிடந்தவரை நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்த நிலையில் சம்பவத்தில் சிக்கி பலியான நபர் யார்? எங்கு சென்றார்? தமிழ்நாட்டை சேர்ந்தவரா? அல்லது வெளி மாநிலத்தை சேர்ந்தவரா? என விருதுநகர் ரயில்வே போலீசார் உடலை கைப்பற்றி தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.