கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் பயணிகள் அதிருப்தி

கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் பயணிகள் அதிருப்தி

கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் பயணிகள் அதிருப்தி

கிளாம்பாக்கம் புதிய பேருந்து முனையத்தில், கூடுதல் ஏ.டி.எம்., மற்றும் டிக்கெட் கவுன்டர் வசதிகள் இல்லாததால், வார விடுமுறை நாளான நேற்று, பயணியர் கடும் அவதிப்பட்டனர்.

கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் இருந்து, தென் மாவட்டங்களுக்கு தினமும் ஏராளமானோர் சென்று வருகின்றனர். பேருந்து நிலையத்தில் ஏ.டி.எம்., இயந்திரம் இல்லாததால், பணம் எடுக்க முடியாமல் பயணியர் சிரமப்பட்டு வந்தனர். இதையடுத்து, இதன் நுழைவாயிலில் ஐந்து ஏ.டி.எம்., இயந்திரங்கள் அமைக்க முடிவானது. இந்தியன் ஓவர்சீஸ் வங்கி ஏ.டி.எம்., மட்டுமே, தற்போது செயல்படுகிறது.

மற்ற வங்கிகளின் ஏ.டி.எம்., இயந்திரம் வைப்பதற்கு இடம் ஒதுக்கி, அதற்கான பணிகள் ஆரம்பிக்கப்பட்டு பல நாட்கள் ஆகியும், இன்னும் செயல்பாட்டிற்கு கொண்டு வரப்படவில்லை. இதனால், ஒரேயொரு ஏ.டி.எம்., மையத்தை மட்டும் பயன்படுத்தும் பயணியர், பணம் எடுப்பதற்காக நீண்ட வரிசையில் காத்திருக்கும் அவலநிலை தொடர்கிறது.

இப்பேருந்து முனையம் திறந்தபோது, ஏராளமான குளறுபடிகள் இருந்தன. பயணியரின் தொடர் புகார்களை அடுத்து, ஒவ்வொன்றாக சரிசெய்யப்பட்டு வருகிறது. ஆனால், ஆரம்பத்தில் இருந்தே, போதிய ஏ.டி.எம்., மையம் அமைக்காமல் இருப்பது, பயணியரிடையே அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.

Tags

Next Story