தனியார் பேருந்தில் ஆபத்தான பயணம் மேற்கொண்ட பயணிகள்

பின்பக்க கம்பியை பிடித்து கொண்டு ஆபத்தான பயணம்

ராசிபுரத்திலிருந்து சேந்தமங்கலம் சென்ற தனியார் பேருந்தில் பின்பக்க கம்பியை பிடித்து கொண்டு ஆபத்தான பயணம் மேற்கொண்ட பயணிகள் குறித்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் புதிய பஸ் நிலையத்தில் இருந்து சேந்தமங்கலம் வழியாக நாமக்கல் நோக்கி தனியார் பேருந்து இரவு பயணிகளை ஏற்றிக் கொண்டு சென்றது. கடைசி பேருந்து என்பதால், பயணிகளின் கூட்டம் அதிகளவில் இருந்தது. பல பயணிகள் படியில் தொங்கியவாறு பயணம் செய்தனர். இந்த நிலையில், ஆபத்தை உணராமல் பார்ப்பவர்களுக்கு அச்சம் ஏற்படுத்தும் வகையில் 4 பயணிகள் பேருந்தின் பின் பக்க கம்பியை பிடித்தவாறு நீண்ட தூரம் பயணம் மேற்கொண்டனர். இந்த காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. போக்குவரத்து துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Next Story


