சென்னை மெட்ரோ பார்க்கிங் வசதியை ஏற்படுத்த பயணிகள் கோரிக்கை!

சென்னை மெட்ரோ பார்க்கிங் வசதியை ஏற்படுத்த பயணிகள் கோரிக்கை!

மெட்ரோ

கடந்த 2015ம் ஆண்டு சென்னையில் அறிமுகப்படுத்தப்பட்ட முதல் கட்ட மெட்ரோ ரயில் சேவை, விமான நிலையம் - விம்கோ நகர் வரை, பரங்கிமலை - சென்ட்ரல் வரை என மொத்தம் 54 கிலோ மீட்ட தொலைவுக்கு சென்னையில் இயக்கப்பட்டு வருகிறது. அதிகரிக்கும் பயணிகளின் எண்ணிக்கையை கருத்தில் கொண்டும் மற்றும் முக்கிய பகுதிகளை இணைக்கும் வகையில் சென்னையில் இரண்டாம் கட்ட மெட்ரோ திட்டம் நடைபெற்று வருகிறது.

116.1 கி.மீ. தொலைவில் 3 வழித்தடங்களில் இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டம், செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதில் மொத்தம் 118 மெட்ரோ ரயில் நிலையங்கள் அமைக்க திட்டமிடப்பட்டு உள்ளது.

இந்த நிலையில் இரண்டாம் கட்ட மெட்ரோ திட்டத்தில் இடம்பெறும் ரயில் நிலையங்களில் பார்க்கிங் வசதி போதுமான அளவில் இடம் பெற வேண்டும் என பயணிகள் சார்பில் கோரிக்கை எழுந்துள்ளது.

Tags

Next Story