ரயில் நிலையத்தில் மேற்கூரை இல்லாததால் பயணிகள் அவதி !

ரயில் நிலையத்தில் மேற்கூரை இல்லாததால் பயணிகள் அவதி !

 நாசரேத் ரயில் நிலையம்

நாசரேத் இரயில் நிலையத்தின் 2ஆம் பிளாட்பாரம் பகுதியில் மேற்கூரை அமைக்க விரைவாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ரயில்வே நிர்வாகத்திற்கு பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

திருநெல்வேலி திருச்செந்தூர் ரயில் பாதையில் நாசரே ரயில் நிலையம் ஒரு முக்கியத்துவத்தை பெற்று வருகிறது. இங்கு தினமும் பள்ளி, கல்லூரி, மாணவ, மாணவிகள், வியாபாரிகள் தொழிலதிபர்கள் ஆயிரக்கணக்கானோர் இரயிலில் திருநெல்வேலிக்கும்- திருச்செந்தூருக்கும் சென்று வருகின்றனர்.

ஆனால் நாசரேத் இரயில் நிலைய இரண்டாவது பிளாட்பார்ம் உயரம் தாழ்வாகவும், அந்த பிளாட்பார்ம் முழுவதும் மேற்கூரை இல்லாமலும் காணப்படுகிறது. பிளாட்பார்ம் உயரம் தாழ்வாக காணப்படுவதால் இரயிலில் ஏறுவோர் மிகவும் சிரமப்படுகின்றனர்.மேலும் இரண்டாவது பிளாட்பார்மில் பயணிகள் காத்து நிற்கும் போது மலை ஏதும் பெய்தால் அவர்கள் மழையிலே நனைந்து கொண்டு நிற்க வேண்டிய சூழ்நிலை உள்ளது.

எனவே தென்னக இரயில்வே நிர்வாகம் நடவடிக்கை எடுத்து நாசரேத் ரயில் நிலையத் தின் இரண்டாவது பிளாட்பார்ம் பகுதியில் மழை மற்றும் வெயிலி னால் பயணிகள் பாதிக்காத வண்ணமும் மழையினால் பாதிக்கப்படும் பயணிகளுக்கு வசதியாக உடனடியாக மேற்கூரை அமைத்து தர வேண்டும் என ரயில்வே நிர்வாகத்திற்கு இரயில் பயணிகள், சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags

Next Story