பேருந்து நிலையத்தில் கழிவுநீர் துர்நாற்றத்தால் பயணியர் அவதி

பேருந்து நிலையத்தில் கழிவுநீர் துர்நாற்றத்தால் பயணியர் அவதி

காஞ்சிபுரம் பேருந்து நிலையத்தில் கழிவுநீர் தேங்குவதால் துர்நாற்றம் வீசுவதுடன், சுகாதார சீர்கேடு ஏற்படும் சூழல் நிலவுகிறது.  

காஞ்சிபுரம் பேருந்து நிலையத்தில் கழிவுநீர் தேங்குவதால் துர்நாற்றம் வீசுவதுடன், சுகாதார சீர்கேடு ஏற்படும் சூழல் நிலவுகிறது.

காஞ்சிபுரம் பேருந்து நிலையத்தில் இருந்து,பல்வேறு இடங்களுக்கு, அரசு, தனியார் பேருந்து என,300க்கும் மேற்பட்ட பேருந்துகள் இயக்கப்படுகின்றன. தினமும் ஆயிரக்கணக்கான பயணியர் காஞ்சிபுரம் பேருந்து நிலையத்திற்கு வந்து செல்கின்றனர். பேருந்து நிலையத்தில், தடம் எண்:76பி, 76சி உள்ளிட்ட அரசு பேருந்துகளுக்கான டைம் கீப்பர் அலுவலகம், திரிகால ஞானேசர் சிவன் கோவில் ஒட்டியுள்ள பகுதியில், பாதாள சாக்கடையில் அடைப்பு ஏற்பட்டு, பேருந்து நிலைய வளாகத்தில் நேற்று காலையில் இருந்து துர்நாற்றத்துடன் கழிவுநீர் வழிந்தோடியது.

இதனால், பயணியர், போக்குவரத்து ஊழியர்கள், நடமாடும் வியாபாரிகள் துர்நாற்றத்தால் மூக்கை பொத்தியபடி சென்றனர். இப்பகுதியில், பாதாள சாக்கடையில் அடிக்கடி அடைப்பு ஏற்படுவது வாடிக்கையாக உள்ளது. இதனால், பேருந்து நிலையத்தில் சுகாதார சீர்கேடு ஏற்படும் நிலை உள்ளது. இதற்கு நிரந்தர தீர்வாக பாதாள சாக்கடையில் ஏற்பட்ட அடைப்பை முழுதும் நீக்க மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பயணியர் வலியுறுத்தி உள்ளனர்.

Tags

Read MoreRead Less
Next Story