டிமிக்கி பஸ்களால் பயணிகள் அவதி!

டிமிக்கி பஸ்களால் பயணிகள் அவதி!

டிமிக்கி பஸ்

டிமிக்கி பஸ்களால் பயணிகள் அவதி.
பொன்னமராவதியில் இருந்து ஆலவயல், இடையாத்தூர், காரையூர், ஆலப்பட்டி, சேரனூர், குடுமியான்மலை, வயலோகம், பெருமாநாடு, திருவப்பூர் வழியாக புதுக்கோட்டைக்கு அரசு பஸ் இயக்கப்பட்டு வந்தது. புதிய வழித்தடத்தில் இந்த பஸ் போக்குவரத்தை கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு அண்ணாதுரை நினைவு நாளை முன்னிட்டு சட்டத்துறை அமைச்சர் ரகுபதி இயக்கி வைத்தார். ஆனால் இந்த பஸ் அடிக்கடி நிறுத்தப்பட்டு வருகிறது. அதே போல் பொன்னமராவதி கொப்பனாம்பட்டி, தேனிமலை, அரச மலை, காரையூர், இடையாத்தூர் வரை இயங்கி வந்த அரசு டவுன் பஸ் கடந்த இரண்டு நாட்களாக இயக்கப்படவில்லை. இதனால் இந்த பஸ்ஸுகளை நம்பி உள்ள பயணிகள், அலுவலர்கள், கல்லூரி மாணவர்கள், தொழிலாளர்கள் என்று அனைத்து தரப்பினரும் பாதிக்கப்பட்டுள்ளனர். இது தொடர்பாக அரசு போக்குவரத்து கழக பொன்னமராவதி கிளை மேலாளரிடம் முறையிட்டோம் எந்த பயலனும் இல்லை. இதை வழித்தடத்தில் குறிப்பிட்ட பஸ்களை தொடர்ந்து இயக்க வேண்டும் இல்லாவிடில் விரைவில் சாலை மறியல் போராட்டம் நடத்த எட்டு ஊர்களைச் சேர்ந்த பொதுமக்கள் முடிவு எடுத்துள்ளனர்.

Tags

Next Story