ஆவூரில் பாஸ்கா திருவிழா தேர் பவனி!

ஆவூரில் புனித பெரியநாயகி அன்னை ஆலயத்தின் பாஸ்கா தேர்த் திருவிழா நடைபெற்றது.
புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை ஒன்றியம், ஆவூரில் புனித பெரியநாயகி அன்னை ஆலயத்தின் பாஸ்கா, தேர்த் திருவிழா நடைபெற்றது. பழைமையும், பெருமையும் கொண்ட இந்த ஆலயத்தின் பாஸ்கா தேர்த் திருவிழா கடந்த மாதம் 31-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து ஒவ்வொரு நாளும் காலை மற்றும் மாலை வேலைகளில் ஆலயத்தில் பல்வேறு பங் தந்தையர்கள் திருப்பலி ஆலயத்தில் பல்வேறு பங்கு தந்தையர்கள் திருப்பலி நிறைவேற்றினர். விழாவில் மலர் தோரணங்கள், மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட 3 சப்பர பவனி நடைபெற்றது. தொடர்ந்து ஆண்டவரின் உயிர்ப்பு பாஸ்காவும், அதைத் தொடர்ந்து அதிகாலை பாதாளதிருப்பலியும் தொடர்ந்து சப்பரப் பவனியும் நடைபெற்றது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக 60 அடி உயரமுள்ள உயிர்த்த ஆண்டவரின் பெரிய தேர் பவனியானது நடைபெற்றது. முன்னதாக, ஆலயத்திலிருந்து உயிர்த்த ஆண்டவரின் சொரூபத்தை மேளதாளம் முழங்க ஊர்வலமாக எடுத்து வந்துபெரிய தேரில் பொருத்தினர். அதேபோல, சிறிய 2 தேர்களில் ஒன்றில் சம்மனசு மற்றொன்றில் பெரியநாயகி அன்னை சொரூபங்கள் பொருத்தப்பட்டன. அதனைத் தொடர்ந்து பெரிய தேரை அருட்தந்தையர்கள் அம்புரோஸ், இன்னாசிமுத்து ஆகியோர் புனிதம் செய்து அர்ச்சித்து வைத்து தொடங்கி வைத்தனர். தொடர்ந்து தேர்களை மேளம் தாளம் அதிர்வேட்டுகள் முழங்க பக்தர்கள் வடம் பிடித்து இழுத்துச் சென்றனர். பிற்பகல் 1.30 மணிக்குதொடங்கிய தேர் பவனியானது ஆவூரில் உள்ள முக்கிய வீதிகள் வழியாக சென்று மீண்டும் 2.25 மணிக்கு நிலையை அடைந்தது. விழாவில், திருச்சி, கீரனூர், விராலிமலை, புதுக்கோட்டை, மாத்தூர் உள்ளிட்ட வெளியூர் மற்றும் வெளி மாவட்டங்களில் இருந்தும், ஆவூர் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்தும் இன மத வேறுபாடின்றி பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.விழா ஏற்பாடுகளை ஆவூர் பங்குத் தந்தை சூசை ராஜ் தலைமையில் பங்கு இறை மக்கள் செய்து செய்திருந்தனர் மாத்தூர் காவல் ஆய்வாளர் நவநீதகிருஷ்ணன் தலைமையில் ஏராளமான போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர்.

Tags

Next Story